Published:Updated:

டெல்லி விசிட்... ஸ்டாலின் முன்வைத்த 14 கோரிக்கைகள்... பிரதமர் டிக் செய்யப்போவது எவற்றை?!

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

டெல்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து 14 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் கொடுத்தார்.

டெல்லி விசிட்... ஸ்டாலின் முன்வைத்த 14 கோரிக்கைகள்... பிரதமர் டிக் செய்யப்போவது எவற்றை?!

டெல்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து 14 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் கொடுத்தார்.

Published:Updated:
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

தலைநகர் டெல்லியில் நேற்று தி.மு.க அலுவலக திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக, மார்ச் 31-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்துவிட்டு, மதியம் ஒரு மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்து அரை மணிநேரம் பேசினார் ஸ்டாலின். அப்போது 14 அம்சக் கோரிக்கைகளை முதல்வர், பிரதமரிடம் கொடுத்தார்.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

காவிரியின் குறுக்கே கேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கக்கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழக மீனவர்களின் பாரம்பர்ய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரியை ஒதுக்க வேண்டும், ஜுன் 2022-க்குப் பின்னரும்கூட ஜி.எஸ்.டி. இழப்பீட்டைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர நடவடிக்கை வேண்டும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும், 2022-ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை மீண்டும் அறிவித்திட வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவது உறுதிசெய்திட வேண்டும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும், தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கிட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்யவேண்டும், நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பன போன்ற 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுத்தார் ஸ்டாலின்.

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் எவற்றையெல்லாம் பிரதமர் பரிசீலிக்க வாய்ப்புள்ளது? என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விசாரித்தோம். ``காவிரிப் பிரச்னையை ஒருபோதும் பிரதமர் கையில் எடுக்க மாட்டார். அதற்கென தனியாக ஆணையம் இருக்கிறது. மட்டுமின்றி, தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்துக்குச் சாதகமாகச் செயல்பட்டால், நிச்சயம் கர்நாடகத்தில் பாதிப்பு ஏற்படும். அதேநேரம், கர்நாடகத்துக்கும் இந்த விஷயத்தில் முழு ஆதரவை பிரதமர் வழங்க மாட்டார். அப்படி கருணைக் காட்டினால், தமிழகத்தில் வளர்ந்துவரும் பா.ஜ.க-வுக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால், இரண்டுபக்கமும் ஆதரவு கொடுக்காமல், பகைத்தும் கொள்ளாமல் நடுநிலையாகவே இருக்க பிரதமர் விரும்புவார்.

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஏற்கெனவே பா.ஜ.க அரசு இறங்கிவிட்டதாகத் தெரிகிறது. இலங்கை சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட இந்தியா, சுமார் 7,500 கோடி ரூபாய் நிதியுதவி செய்தது மட்டுமின்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரிலும்கூட சென்றார். இலங்கைக்கு கஷ்டக்காலத்தில் உதவ யார் வந்தாலும் வரவேற்பார்கள், ஆனால் ஒருபோதும் ஒரு நாட்டிடம் சரணடைய மாட்டார்கள். இலங்கை நம்மைப் பயன்படுத்துவதுபோல, நாம் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்கிறோம். அதற்காகத்தான் நிதி கொடுத்து, தலையில் தடவிக்கொடுத்திருக்கிறோம். அடுத்ததாக, வீட்டுப் பத்திரத்தையும், பைக் ஆர்.சி புக்கையும் வைத்து பணம் பெறுவதுபோல, கச்சத்தீவை வைத்து இலங்கை நிதி பெறக்கூடியச் சூழலை இந்தியாவே உருவாக்கிவருகிறது. அப்படியொரு நேரம் வரும்போது கச்சத்தீவை மீட்டு, அங்கு நிரந்தரமாக ஒரு ராணுவ கட்டமைப்பை இந்தியா உருவாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது. கச்சத்தீவு குறித்து ஓரளவு ஸ்டாலினுக்குத் தெரிந்த காரணத்தினால்தான் கோரிக்கையில் அதையும் சேர்த்திருக்கிறார். கச்சத்தீவை மீட்கும் வரை மீனவப் பிரச்னையில் ஒருபோதும் டெல்லி தலையிடாது.

கச்சத்தீவு
கச்சத்தீவு

நிலக்கரித் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதும் இருப்பதால், ஏற்றுக்கொள்வது கஷ்டம். இருந்தாலும் தற்போது அனுப்பும் அளவைவிட கொஞ்சம் கூடுதலாக அனுப்பக்கூடிய வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக காட்டுக்கத்துக் கத்திய பின்னர்தான் தமிழகத்துக்கான இழப்பீட்டை மத்திய அரசு விடுவித்தது. ஜூன் மாதத்திற்குப் பிறகும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனக் கேட்கிறார் ஸ்டாலின். இக்கோரிக்கை இன்னும் பலமுறை கேட்டபின்னர்தான் ஓகேயாகும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க அரசு இப்போதைக்கு பரிசீலிக்காது. உக்ரைன் ரிட்டன் மாணவர்களைப் பொறுத்தவரை என்ன முடிவு எடுப்பது என்று மத்திய அரசே குழப்பத்தில்தான் உள்ளதால் இதிலும் தெளிவுகிடைக்காது. டி.ஆர்.டி.ஓ ஆய்வுக்கூடம் என்பது பலகாலமாகக் கேட்டுவருவதுதான் என்பதால், அது வழக்கம்போலக் கிடப்பில்தான் போடப்படும். இத்தனை ஆண்டுகள் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கான புறப்படும் இடமாக சென்னை இருந்ததை திடீரென கேரளாவுக்கு மாற்றிவிட்டது மத்திய அரசு. மாநில முதல்வராக இதைக் கேட்பதால், பிரதமர் பிரிசீலிக்க வாய்ப்புள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தமிழக அரசே இலங்கைக்குத் தேவையானப் பொருட்களை வழங்க அனுமதி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். இதைக் கண்டிப்பாக மோடி ஒப்புக்கொள்ளவே மாட்டார். புதிய ரயில்வே திட்டத்துக்கு வாய்ப்புக்குறைவு. நியூட்ரினோத் திட்டத்தை ரத்து செய்வது குறித்தும், நரிக்குரவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது” என்று முடித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism