Published:Updated:

`அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்' - ஸ்டாலின் அறிவிப்பு!

சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம்

``ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது ‘’ என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

`அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்' - ஸ்டாலின் அறிவிப்பு!

``ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது ‘’ என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல தமிழக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்படும். இங்கு வாலிபால், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளுடன்கூடிய நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளது. சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அருகே மெகா விளையாட்டு நகரம் அமைக்கப்படும். விளையாட்டுத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து விளையாட்டுதுறையில் புதிய திட்டங்கள் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை ``அடுத்த முறை தமிழ்நாடு வரும்போது முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism