Published:Updated:

விருதுநகர் பாலியல் வழக்கு: ``பொள்ளாச்சி வழக்குபோலக் கையாள மாட்டோம்’’ -சிபிசிஐடிக்கு மாற்றிய ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

விருதுநகரில் பட்டியல் இனப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பாலியல் வழக்கு: ``பொள்ளாச்சி வழக்குபோலக் கையாள மாட்டோம்’’ -சிபிசிஐடிக்கு மாற்றிய ஸ்டாலின்

விருதுநகரில் பட்டியல் இனப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

விருதுநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், தி.மு.க நிர்வாகிகள் உட்பட எட்டு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக எம்.பி கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்துக்குக் கடும் கண்டனத்தை முன்வைத்துவருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இது குறித்துப் பேசுகையில், ``விருதுநகரில் 22 வயதுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் வழக்கு பதிவு செய்து, 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள நான்கு பேர் சிறார் நீதிமன்றத்தின் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ஒரு மாடல் வழக்காக, நேரடியாகக் கண்காணிக்குமாறும், அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையின் தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைப் பொள்ளாச்சி வழக்குபோலக் கையாள மாட்டோம். வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போலல்லாமல் இது முறையாகக் கையாளப்படும். இந்த மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே விரைந்து தண்டனை பெறுவதில் ஒரு முன்னோடி வழக்காக இருக்கும். விருதுநகர் பாலியல் குற்றச் சம்பவத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
இது மாதிரி தவறு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கப்போகிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism