Published:Updated:

``ஜனவரி 2-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, சர்க்கரை!" - ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் கும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க முடிவு.

Published:Updated:

``ஜனவரி 2-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, சர்க்கரை!" - ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் கும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க முடிவு.

முதல்வர் ஸ்டாலின்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். இதில் இந்தாண்டு ஜனவரியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல், முறைகேடுகள் நடந்ததாக அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் தி.மு.க அரசை விமர்சித்து வந்தன.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு

இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில், தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் கும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க முடிவுசெய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

இதன்மூலம், 2.19 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், அரசுக்கு 2,356.67 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஜனவரி 2-ம் தேதியன்று சென்னையில் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அன்றைய தினமே மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தொடங்கிவைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.