Published:Updated:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: அதிருப்தியில் `ஐவர்’ - பின்னணி என்ன?!

சத்தியமூர்த்தி பவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை விரைந்து முடிவு எடுக்காததால், அந்தப் பதவிக்குத் தீவிரமாக முயற்சி செய்துவந்த ஐந்து பேர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: அதிருப்தியில் `ஐவர்’ - பின்னணி என்ன?!

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை விரைந்து முடிவு எடுக்காததால், அந்தப் பதவிக்குத் தீவிரமாக முயற்சி செய்துவந்த ஐந்து பேர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சத்தியமூர்த்தி பவன்

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரிக்கு 2019-ம் ஆண்டு பதவி வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி விதிமுறைகளின்படி தலைவராக இருப்பவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியைத் தொடர முடியும். இதன்படி அழகிரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பின்னர், அந்தப் பதவியைப் பிடிக்க பலரும் முயற்சி மேற்கொண்டனர். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் நியமனம், பாரத் ஜோடோ யாத்திரை, ஈரோடு தேர்தல் போன்றவற்றின் காரணமாக, தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் தள்ளிப்போனது.

ஒருவழியாக இவையனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் கே.எஸ்.அழகிரியை மாற்றுவதற்கான வேலை தொடங்கியது. இதன் காரணமாகப் பலரும் அந்தப் பதவியைக் கைப்பற்றும் வேலையைத் தொடங்கினர். குறிப்பாக ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகிய ஐந்து பேருக்குமிடையில் கடுமையான போட்டி ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலமாக ஜோதிமணி காய் நகர்த்திவந்தார். பிரியங்கா காந்தி மூலமாக கார்த்தி சிதம்பரம் முயற்சி மேற்கொண்டுவந்தார். இதேபோல் சோனியா- ராகுல் மூலமாக செல்லகுமாரும், கார்கே மூலமாக ரூபி மனோகரனும் முயற்சி மேற்கொண்டுவந்தனர்.

சமீபத்தில், கார்கே காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றப் பின்னர் தமிழகத்துக்கு முதன் முறையாகவந்தார். அப்போதும் இந்த ஐவர் உள்ளிட்ட மேலும் சிலரும் தலைவர் பதவி குறித்து பேசியதாகத் தகவல் வெளியானது. கார்கே டெல்லி சென்றதும், ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தார்களாம். ஆனால், தலைமையிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ். இதனால் தலைவர் பதவிக்கு முயன்றுவந்தவர்கள் அதிர்ச்சியைச் சந்தித்தனர்.

மல்லிகார்ஜூன கார்கே.
மல்லிகார்ஜூன கார்கே.

இதற்கிடையில், விரைவில் கர்நாடகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக புதிய தலைவர் நியமனம் தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஐந்து பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், "தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்துவந்தனர். இதற்கிடையில், கர்நாடகா தேர்தல் வருகிறது. எனவே, அதில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. முக்கியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் காரணமாக மற்ற பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கிணற்றில் போட்ட கல் போன்று தலைவர் பதவி நியமனம் இருப்பதால், அந்தப் பதவியைப் பிடிப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்துவந்தவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதனால் அவ்வப்போது நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்துவருகிறார்கள். மேலும், அவர்களின் ஆதரவாளர்கள்கூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் செல்வதில்லை" என்றனர்.