Published:Updated:

தமிழ்நாடு ஊரடங்கு:`ஜூலை-5 வரை நீட்டிப்பு; 3 வகை மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன?'

ஸ்டாலின்
ஸ்டாலின்

அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தநிலையில், இன்று ஊரடங்கை ஜூலை-5 வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி; ஏற்கெனவே மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டதன்படி, வகை-2, வகை-3 உள்ளிட்டவற்றுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வகை -1 ல் உள்ள மாவட்டங்களுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வகை 1 - 11 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

வகை 2 - 23 மாவட்டங்கள்

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்.

வகை 3 - 4 மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.


மாவட்டவாரியான முக்கியத் தளர்வு அறிவிப்புகள்:

1.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி. இந்த நான்கு மாவட்டங்களில், ஜவுளிக்கடைகளுக்கு அனுமதி. 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

2. வகை 1-ல் உள்ள மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை. டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை.

வகை-1  ல் உள்ள 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள்

வகை-2 -ல் உள்ள 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள்

1. அனைத்துத் தனியார் நிறுவனங்களும் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

2. பொதுப்போக்குவரத்து குளிர்சாதன வசதியில்லாமல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

வகை 3 - ல் உள்ள 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி. இந்த நான்கு மாவட்டங்களில் ஜவுளிக்கடைகளுக்கு அனுமதி, 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

 வகை 3 - ல் உள்ள 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள்
வகை 3 - ல் உள்ள 4 மாவட்டங்களுக்கான தளர்வுகள்

திருமணங்களுக்கான பயண  அனுமதி

வகை 2, வகை 3 - ல் உள்ள 27 மாவட்டங்களுக்குள் திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல இ-பதிவு தேவையில்லை.

திருமணங்களுக்கான பயண  அனுமதி
திருமணங்களுக்கான பயண அனுமதி

முழு அறிவிப்பைத் தெரிந்துகொள்ள...

download
அடுத்த கட்டுரைக்கு