Published:Updated:

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தமிழ்நாடு அரசு

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

Published:Updated:
தமிழ்நாடு அரசு

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக, அங்கு ஒரு டைரி கிடைத்ததாகவும், அந்த டைரியில் அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா், வணிகவரித் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜாா்ஜ் உள்ளிட்ட காவல் உயா் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோா் லஞ்சம் வாங்கியதாக அவர்களின் பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதலில் விசாரித்தனர். அதன் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதி இருந்தது. இந்த நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!