Published:Updated:

தமிழக அரசின் `அய்யன் திருவள்ளுவர்’, `பெருந்தலைவர் காமராசர்’ விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசு
News
தமிழக அரசு

தமிழக அரசு சார்பில் குமரி அனந்தன், மு.மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் விருது வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 -ம் ஆண்டுக்கான `அய்யன் திருவள்ளுவர் விருது’ மு.மீனாட்சிசுந்தரத்துக்கும், `2021-ம் ஆண்டுக்கான `பெருந்தலைவர் காமராசர்’ விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கப்படவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும் திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்தும் வருபவர்களுக்கு, `அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்கப்பட்டுவருகிறது. 2019-ம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையான ஒருவராக பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சார்ந்த மீனாட்சிசுந்தரத்துக்கு, தமிழக அரசு 2022-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது வழங்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதே போன்று காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் எம்.பி., எம்.எல்.ஏ ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும், பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும், சிறந்த நூல்களைப் படைத்தவரும், பன்முகத் திறன்கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு 2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்குகிறது.

குமரி அனந்தன்
குமரி அனந்தன்

விருது பெரும் இருவருக்கும் விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். இவ்விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.