Published:Updated:

ஜூனியர் விகடன் மீது வழக்கு போட்டிருக்கும் தமிழ்நாடு அரசு... பதில் தரும் விகடன் வழக்கறிஞர்!

ஜூனியர் விகடன்

தமிழ்நாடு அரசு ஜூனியர் விகடன் மீது வழக்கு போட்டிருக்கும் நிலையில், இது குறித்து விகடன் வழக்கறிஞர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

ஜூனியர் விகடன் மீது வழக்கு போட்டிருக்கும் தமிழ்நாடு அரசு... பதில் தரும் விகடன் வழக்கறிஞர்!

தமிழ்நாடு அரசு ஜூனியர் விகடன் மீது வழக்கு போட்டிருக்கும் நிலையில், இது குறித்து விகடன் வழக்கறிஞர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:
ஜூனியர் விகடன்

ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் 'ஜி ஸ்கொயர்' கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டார்.

'ஜி ஸ்கொயர்' புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் பிப்ரவரி 3-ம் தேதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியபோது, இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுத்து பிப்ரவரி 7-ம் தேதி ஜூனியர் விகடன் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இந்தச் சம்பவத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். மேலும் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாகச் சிலர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக விகடன் வழக்கறிஞர் அளித்துள்ள முழுமையான விவரங்களைக் காண கிழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism