தமிழகத்தில் சின்னதும் பெரியதுமாக சுமார் 44,000 கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு 5,32,000 ஏக்கர் அசையா சொத்துகள் இருக்கின்றன. இந்தச் சொத்துக்களில் 40 சதவிகிதத்துக்கும் மேல் ஆங்காங்கே உள்ள அரசியல் புள்ளிகள், உள்ளூர் வி.ஐ.பி-க்கள் தங்களது கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள். இந்தச் சொத்துக்களை அடையாளம் கண்டுபிடிக்க, அறநிலையத்துறை சார்பில் சர்வேயர்களை நியமிக்கும் படலம் தற்போது நடந்துவருகிறது. பழைய சொத்துப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள எல்லைகளை வரையறுத்து, அதைச் சுற்றி சர்வே அடையாளக் கற்களை பதிக்கப்போகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படி அறநிலையத்துறையினர் அடுத்த அதிரடியில் இறங்கப்போகிறார்கள். இதுநாள் வரை கோயில் சொத்துகளைச் சட்டவிரோதமான முறையில் அனுபவித்துவருகிறவர்கள் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியாகியுள்ளனர். ஆனால், ஆன்மிக ஆர்வலர்கள் தரப்பில் இந்த அதிரடிக்கு, தங்களது ஆதரவை இப்போதே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். இது பற்றி அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``கோயில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதியச் சொன்னதும், கோயில் சொத்துகளை தற்போது ஆக்கிரமித்துள்ள பலரும் கலக்கமடைந்துள்ளனர். அனைத்துச் சொத்துகளின் பத்திரங்களையும் இப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்துவிட்டனர். இதுவரை அனுபவித்தவர்கள் இனி அந்தச் சொத்துகளை கோயில் வசம் ஒப்படைத்துவிட்டுப் போவதுதான் நல்லது. இல்லாவிட்டால், சட்டரீதியான பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார்.