Published:Updated:

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை... யாருக்குக் கிடைக்கும்?-கூட்டுறவுத்துறை சொல்வது என்ன?

நகைக்கடன்
News
நகைக்கடன்

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் இறுதிப்பட்டியலில், ஏற்கெனவே பெறப்பட்ட விவரங்களைப் பகுப்பாய்வு செய்ததில் சுமார் 35,37,693 கடனாளிகள் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இல்லாதவர்கள் என்ற தகவல் இடம்பெற்றிருக்கிறது.

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் இறுதிப்பட்டியலை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், ஏற்கெனவே பெறப்பட்ட 48,84,726 பயனாளிகளின் விவரங்களைப் பகுப்பாய்வு செய்ததில் சுமார் 35,37,693 கடனாளிகள் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதி இல்லாதவர்கள் என்ற அதிச்சித் தகவலும் இடம்பெற்றிருக்கிறது.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கு உட்பட்டு கடன்பெற்றவர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். மேலும், விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசால் பின்னர் வெளியிடப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த அரசாணையில், ``நகைக்கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள், சில தகுதிகளின்கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6,000 கோடி ரூபாய் ஆகும் எனத் தெரியவருகிறது. இதற்காகக் கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளைச் செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

அதனடிப்படையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51விதமான தகவல்களைச் சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக்கடன்கள் வழங்கப்பட்டதிலும் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே `நகைக்கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமாக மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும்’ மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பிய `தகுதி பெறும் பயனாளிகள் மற்றும் தகுதி பெறாத பயனாளிகளின் உத்தேச இறுதிப் பட்டியல்' கடிதத்தில், ```ஏற்கெனவே மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதல் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்ஸெல் படிவத்தில் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்படி தள்ளுபடிக்குத் தகுதியில்லாத நபர்களைக் கீழ்க்காணும் நிபந்தனைகளின்படி பிரித்திருக்கிறார்கள்.

 நகைக்கடன்
நகைக்கடன்

அரசு அறிவித்திருக்கும் நிபந்தனைகள்:

  • ஏற்கெனவே 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர்.

  • நகைக்கடன் தொகை முழுமையாகச் செலுத்தியவர்கள்.

  • 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர்.

  • 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்.

  • கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

  • கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

  • அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்.

  • குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்.

  • ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்.

  • எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்.

  • ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைதாரர்கள்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதிபெற்ற நகைக்கடன் பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர்.