Published:Updated:

``எதற்காக விமர்சிக்கிறோம் என்று தெரியாமலேயே சிலர் விமர்சிக்கிறார்கள்!” - மா.சுப்பிரமணியன் காட்டம்

மா.சுப்பிரமணியன்
News
மா.சுப்பிரமணியன் ( file photo )

``தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழ்நாட்டில் 61 இடங்களில், 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூன்றுவிதமாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மேலும், ``15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் தொடங்கிவைத்தார். இந்தியாவில் இதுவரை 75 சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது” எனக் கூறினார்.

முதலமைச்சர் உரியக் காலத்துக்கு முன்பாகவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக ஒரு வதந்தி பரவிவந்தது. இது பற்றிச் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ``அவர் ஒரு முன்களப் பணியாளர் என்ற முறையில் சரியான நேரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்” எனத் தெரிவித்தார்.

மேலும் ``சிலர், எதற்காக விமர்சனம் செய்கிறோம் என்று தெரியாமலேயே விமர்சனம் செய்துவருகிறார்கள். சமூக வலைதளங்களில் மூளை அதிகமாகி மூக்கிலும் காதிலும் வழிபவர்கள், இது மாதிரியான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்” என்று கூறினார் .