Published:Updated:

முதல்வர் பங்கேற்கும் விழா: `உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமில்லை’- குமுறும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள்

ஸ்டாலின்

சென்னையில் இன்று நடைபெறும் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில், பொறியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஊழியர்கள் குமுறுகிறார்கள்.

முதல்வர் பங்கேற்கும் விழா: `உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமில்லை’- குமுறும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள்

சென்னையில் இன்று நடைபெறும் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில், பொறியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஊழியர்கள் குமுறுகிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று (மே 1) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறையின் பவளவிழா நினைவுத்தூணைத் திறந்துவைத்து பவளவிழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

பொறியாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருப்பதாக ஊழியர்கள் தரப்பில் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.

“நெடுஞ்சாலைத்துறையில் 28,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால், பெறியாளர்கள் 2,000 பேர் இருக்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறையின் பணிகளிலும், அதன் வளர்ச்சியிலும் ஊழியர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், ஊழியர்களின் உழைப்புக்கு நெடுஞ்சாலைத் துறையில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத போக்கு இருந்துவருகிறது. இன்று நடக்கும் பவள விழா நிகழ்ச்சியிலும் அது வெளிப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் இந்த விழாவில் கீழ்மட்ட ஊழியர்களை முதன்மைப்படுத்தவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசிய அவர்கள், “மேலாளர் முதல் வாட்ச்மேன் வரை 58 வகையான பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்கிறார்கள். ஆனால், ஓய்வுபெற்ற ஐந்து பொறியாளர்களுக்கு மட்டும் முதல்வர் விருது கொடுக்கவிருக்கிறார். தொழிலாளர் தினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டாமா? கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடியவர்களை சமமாக பாவிக்க வேண்டும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் முதன்மை இயக்கந ர் பணியிடம் தலைமை பொறியாளர் நிலையில் இருந்து வருகிறது

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதனால் இத்துறையில் பொறியாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதனால், தவறு செய்யும் பொறியாளர்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் எளிதாகத் தப்பித்துவிடுகிறார்கள். எனவே, முதன்மை இயக்குநர் பணியிடத்துக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகிறோம்” என்றனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, "தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த விழாவில் எளிமையாக நடத்தவிருக்கிறோம். அதிகமானோரை அழைக்கவில்லை. பொறியாளர்களுடன் ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். மற்றபடி எந்த பாகுபாடும் இல்லை" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism