Published:Updated:

``இந்தியா - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து" - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பாம்பனில் புதிய ரயில் பாதை அமைப்பதை ஆய்வுசெய்த அமைச்சர்

``இந்தியா - இலங்கை இடையே செயல்பட்டுவந்த கப்பல் போக்குவரத்து 1984-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், அதை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

``இந்தியா - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து" - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

``இந்தியா - இலங்கை இடையே செயல்பட்டுவந்த கப்பல் போக்குவரத்து 1984-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், அதை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Published:Updated:
பாம்பனில் புதிய ரயில் பாதை அமைப்பதை ஆய்வுசெய்த அமைச்சர்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாம்பன், ராமேஸ்வரம், அரிச்சல்முனை பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசும்போது, ``பாம்பன் கால்வாய் மற்றும் அதன் அணுகு பகுதிகள், புதிதாகக் கட்டப்பட்டுவரும் ரயில் தட தூக்குப் பாலம், கப்பல்கள் பயணிக்கவிருக்கும் வழித்தடங்கள், பாம்பன் கால்வாய்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் நான்குவழிச் சாலைக்கான வழித்தடங்கள், பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழப்படுத்துவதற்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையின்படி தூர்வார உத்தேசித்திருக்கும் பகுதிகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் தாக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கையுடன் சேர்த்து, சுற்றுச்சூழல் மற்றும் கடலோர விதிமுறை மண்டலம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும், இந்தத் திட்டத்தை மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் நிதியுதவியுடன் 10 மீட்டர் ஆழத்துக்குத் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தரக் கப்பல்கள், கடற்படை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் கிழக்கு-மேற்காக பயணிக்க ஏதுவாக அமையும்.

மாவட்ட ஆட்சியரிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு
மாவட்ட ஆட்சியரிடம் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு

ராமேஸ்வரம், சுற்றுலாப் யணிகள் அதிகம் வரக்கூடிய பகுதி. அவ்வாறு கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதை அடுத்துள்ள தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனைப்பகுதிக்கு கண்டிப்பாக சென்று சுற்றி பார்த்துவருகின்றனர். எனவே அந்தப் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வசதியைக் கருத்தில்கொண்டு அதிநவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவறை வசதிகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதேபோல் ராமேஸ்வரம் (இந்தியா) மற்றும் தலைமன்னார் (இலங்கை) இடையேயான தூரம் சுமார் 26 கடல் மைல்கள் (48 கிலோமீட்டர்) ஆகும். சுமார் 13 கடல் மைல் வேகத்திறன்கொண்ட 150 முதல் 300 பயணிகள் பயணிக்கும், பயணிகள் கப்பல் சுமார் இரண்டு மணி நேரத்தில் தலைமன்னார் துறைமுகத்தைச் சென்றடைய இயலும். 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையேயான இந்த இந்திய-இலங்கைக் கப்பல் போக்குவரத்து 1984-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தக் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டால் சாதாரண நடுத்தர மக்களும் பயணிக்க ஏதுவாக இருப்பதோடு, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறு, குறு வர்த்தகம் மேம்பட பெருமளவில் வழிவகுக்கும். மேலும், ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வசதிகள் மேம்பட வழிவகுக்கும். இதை மீண்டும் செயல்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம்

தற்போது ராமேஸ்வரம் சிறு துறைமுகப் பகுதியில் பயணிகள் கப்பல் தோணித்துறை வசதிகள் ஏதும் இல்லை, புதிதாக இந்த தோணித்துறை அமைப்பதற்கு ஏற்ற சாத்தியமான இடம் கோதண்ட ராமர் கோயில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ளது. இந்த அணுகு தோணித்துறையில், பயணிகள் இறங்குமிட வசதி, சுங்கத்துறை அலுவலகம், குடியுரிமை அலுவலகம், சுகாதாரத்துறை அலுவலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக நவீன வசதியுடன் ஏற்படுத்துவதற்கான ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கப்பல் போக்குவரத்து மூலமாக அயல்நாட்டுப் பயணிகள் வருகை இருக்கும் என்பதால், இந்தத் துறைமுக வசதியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் ஒப்புதல் மிக அவசியம் தேவைப்படுகிறது. இதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தின் கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் உடனடியாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் அக்னி திருத்தகடல் பகுதியில் நடத்தப்பட்டுவரும் பயணிகள் படகு போக்குவரத்தை ஆய்வு செய்தேன். இப்படகு போக்குவரத்தை ஆண்டுதோறும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயணிகள் படகுப் போக்குவரத்துப் பகுதியை மேலும் விரிவாக்கம் செய்வதோடு, இதே போன்று ராமேஸ்வரம் தீவைச் சுற்றியும் மேலும் சில பகுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய பயணிகள் படகுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.