Published:Updated:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..! #LiveUpdates

துரைமுருகன்
துரைமுருகன்

மே 2 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளின் முழு தொகுப்பு...!

02 May 2021 7 AM
02 May 2021 6 PM

`தமிழக மக்களுக்கு நன்றி!’ - ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மாலை 5.45 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திமுக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காவல்துறை உயரதிகாரிகள், நேரடியாக ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் ட்விட்டர் மூலமும் தங்களைன் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதில், ``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா! 'ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்' என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!

தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!

இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.

கழகம் வென்றது! - அதைத் தமிழகம் இன்று சொன்னது!

இனித் தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02 May 2021 12 PM

தொடர்ச்சியாக பின்தங்கி வருகிறார் துரைமுருகன்..!

உத்தேச அமைச்சரவைப் பட்டியலில் கூட இடம்பெற்ற துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு! - என்ன காரணம்?

காட்பாடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ராமு 5,465 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

02 May 2021 12 PM

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் முன்னிலை..!!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

கோவில்பட்டி தொகுதியில் சற்று முன் வரை பின்தங்கியிருந்த அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தற்போது முன்னிலை பெற்றிருக்கிறார். அவர் அதிமுக வேட்பாளர்  கடம்பூர் ராஜூவை விடவும் 105 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். பெரியளவில் வித்தியாசம் இல்லை என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

02 May 2021 11 AM

5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை..!

கமலாலயம்
கமலாலயம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் துறைமுகம் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ்.பி.செல்வம், தாராபுரம் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன், உதகை பா.ஜ.க தொகுதி வேட்பாளர் மு.போஜராஜன், திருநெல்வேலி பா.ஜ.க தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

02 May 2021 11 AM

கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலை..!!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியில் முதலாம் சுற்றில் பின் தங்கியிருந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தற்போது, அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை விடவும் 429 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிறிய வித்தியாசம் தான் என்பதால் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.

02 May 2021 11 AM

தேனி : முகவர்களுக்கு பேனா இல்லை… தாமதமான வாக்கு எண்ணிக்கை!

தேனி மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம்(தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவினைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தேனி அருகே உள்ள கம்மவர் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று காலை, 8 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ’ஸ்ட்ராங் ரூம்’ திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates
ஈ.ஜெ.நந்தகுமார்.

வாக்கு எண்ணிக்கைக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு என தேர்தல் ஆணையத்தால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் பதிவான வாக்குகள் குறித்த 17C படிவத்தின் நகலை, முகவர்கள் கொண்டுவரலாம். ஆனால், போன், பேனா, பேப்பர், நோட் என எதையும் எடுத்துவரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்த முகவர்கள், ‘எங்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது பேனா, பேப்பர், நோட் தேவை.!’ என கூற, ’அதனை நாங்களே கொடுத்துவிடுவோம். நீங்கள் எதையும் எடுத்துவரக் கூடாது!’ என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசியல் கட்சி முகவர்கள், 17 C படிவத்தின் நகலை மட்டும் எடுத்துக்கொண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates
ஈ.ஜெ.நந்தகுமார்.

இந்நிலையில், முதல்கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனை எழுதிக்கொள்ள முகவர்கள் கையில் பேனாவோ, பேப்பரோ, நோட்டோ எதுவும் இல்லாத நிலையில், ‘எங்களுக்கு பேனா பேப்பர் வேணும்…’ என கேட்டனர். அதன் பின்னரே, முகவர்களுக்கு பேப்பர் பேனா கொடுக்கப்படவில்லை என தெரிந்தது. உடனடியாக, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சென்று பேனா, பேப்பர், நோட் வாங்கி வரப்பட்டது. இதனால், சுமார் 30 நிமிடம் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானது.

இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதை அறிந்த, அ.தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிகாரிகளுடன் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை துவங்கி நடந்துவருகிறது.

- கணேஷ்

02 May 2021 10 AM

பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம்..!!

சீமான்
சீமான்

வாக்கு எண்ணிக்கையில் 234 தொகுதிகளில் பெரும்பலான தொகுதிகளில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியிலும் அக்கட்சி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

02 May 2021 10 AM

நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் பின்னடைவு..!!

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

நன்னிலம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் காமராஜ், தற்போது 848 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் 8,289 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

02 May 2021 10 AM

பென்னாகரம் தொகுதியில் பாமக முன்னிலை..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates

பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் பின்.என்.பி இன்பசேகரனை விடவும் 1,194  வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

02 May 2021 10 AM

திருவொற்றியூரில் திமுக முன்னிலை.. மூன்றாம் இடத்தில் சீமான்..!!

சீமான்
சீமான்

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 2,818 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் குப்பன் 1,961 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கிறார்.

02 May 2021 10 AM

முன்னிலை நிலவரம்...!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 129 இடங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது. போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருக்கிறார்.

திமுக கூட்டணி -129

அதிமுக கூட்டணி - 103

அமமுக கூட்டணி - 00

மநீம கூட்டணி - 00

நாதக - 00

02 May 2021 10 AM

தொடர்ந்து பின் தங்கும் 4 அமைச்சர்கள்....!!

திருச்சி கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பெஞ்சமின், ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாண்டியராஜன் மற்றும் ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமார் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர்.

02 May 2021 10 AM

வி.ஐ.பி வேட்பாளர்கள் முன்னிலை விவரங்கள்!

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி கூடுதலாக 702 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிறிய வித்தியாசம் என்பதால் கடும் போட்டு நிலவுகிறது.

கோவில்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விடவும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 424 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சா.மு.நாசரை விடவும் 4,009 வாக்குகள் குறைவாக பெற்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான மஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்தங்கி வருகிறார்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் அதிமுக வேட்பாளர் ராமுவை விடவும் 398 வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கி வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

துரை முருகன்
துரை முருகன்

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 1,909 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

02 May 2021 10 AM

அரவக்குறிச்சியில் அண்ணாமலை பின்னடைவு..!!

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் இளங்கோவை விட 600 வாக்குகள் குறைவான நிலையில் பின்தங்குகிறார்.

02 May 2021 9 AM

திமுக முன்னிலை..!

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 99 இடங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

திமுக கூட்டணி -99

அதிமுக கூட்டணி - 74

அமமுக கூட்டணி - 00

மநீம கூட்டணி - 01

நாதக - 00

02 May 2021 9 AM

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி ஆதிக்கம்..!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்தை விடவும் 6,000 அதிகமான  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

02 May 2021 9 AM

போடிநாயக்கனூரில் சொர்ப்பமான வாக்கு வித்தியாசத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை..!!

 ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக சார்பில்  போட்டியிடும் தங்கத்தமிழ் செல்வனை விடவும் சொர்ப்பமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது!

02 May 2021 9 AM

முன்னிலை நிலவரம்!

திமுக கூட்டணி - 68

அதிமுக கூட்டணி - 47

அமமுக கூட்டணி - 02

மநீம கூட்டணி - 01

நாதக - 00

02 May 2021 9 AM

கமல் முன்னிலை...!

கமல்
கமல்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலை. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் உள்ளார். மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனும் உள்ளனர்.

02 May 2021 9 AM

முன்னிலை நிலவரம்!

திமுக கூட்டணி -40

அதிமுக கூட்டணி - 32

அமமுக கூட்டணி - 01

மநீம கூட்டணி - 00

நாதக - 00

02 May 2021 8 AM

தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் முன்னிலை!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தாராபுரம்தொகுதியில் தற்போது முன்னிலையில் இருக்கிறார். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எல் முருகன், 1,343 வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கயல்விழி 864 வாக்குகள் வெற்றிருக்கிறார்.

02 May 2021 8 AM

திருச்சி மேற்கில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை..!

கே.என் நேரு
கே.என் நேரு

ஓட்டு எண்ணிக்கையில் திருச்சி மேற்கு தொகுதியில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். அதே போல் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி  நடராஜன் முன்னிலை வகிக்கிறார்.

02 May 2021 8 AM

குமாரபாளையத்தில் தங்கமணி முன்னிலை..!!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குமாரபாளையத்தில் திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை விடவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தங்கமணி முன்னிலை வகிக்கிறார்.

02 May 2021 8 AM

முந்தும் தி.மு.க... டஃப் கொடுக்கும் அ.தி.மு.க..! 

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போது தபால் வாக்குகள் எண்ணப்படு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது..

திமுக கூட்டணி -24

அதிமுக கூட்டணி - 14

அமமுக கூட்டணி - 01

மநீம கூட்டணி - 00

நாதக - 00

02 May 2021 8 AM

தபால் ஓட்டுக்களை எண்ணுவதில் கால தாமதம்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணியானது சற்று முன் தொடங்கியது. மின்னணு வாக்குகளுக்கு முன்பாக எண்ணப்படும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை பணியானது சென்னை மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தாமதமாக தொடங்கியிருக்கிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மெரினா ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் 3 தொகுதிகளுக்கான தபால் ஒட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல், மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணியானது இன்னும் தொடங்கப்பட வில்லை.

02 May 2021 8 AM

கணக்கை தொடங்கிய திமுக..!

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போது தபால் வாக்குகள் எண்ணப்படு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது..

திமுக கூட்டணி -07

அதிமுக கூட்டணி - 04

அமமுக கூட்டணி - 00

மநீம கூட்டணி - 00

நாதக - 00

02 May 2021 8 AM

`234 தொகுதிகளில் 5,63,253 ஓட்டுகள்' - வெற்றியைத் தீர்மானிக்கும் தபால் ஓட்டுகள்?!

கடந்த மாதம் 6-ந் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத்  தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாகத் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் தபால் ஓட்டுகள் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 4 மேஜைகளில் எண்ணப்பட இருக்கின்றன. ஒரு மேஜையில் அதிகபட்சமாக 500  தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இந்த முறை தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தபால் முறையில் வாக்குகளைச் செலுத்த அனுமதி வழங்கியிருந்ததன் காரணமாக, கடந்த சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் அதிகளவில் பதிவாகி இருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, 'தமிழகத்தில் நேற்றுவரை மொத்தம் 5,63,253 தபால் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக' நேற்று கூறியிருந்தார். கடந்த தேர்தலை விடவும் இந்தமுறை அதிகளவில் தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 முதல் 5,000 தபால் வாக்குகள் பதிவாகி இருக்கும். எனவே, இழுபறியான தொகுதிகளில் இந்த தபால் ஓட்டுகள் களத்தில் வெற்றியை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02 May 2021 8 AM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - ஒரு பார்வை

02 May 2021 8 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

சென்னை கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலருக்கு கொரோனா காரணமாக, தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

02 May 2021 7 AM

காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நடைபெறவிருக்கிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.

01 May 2021 7 PM

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னை லயோலா கல்லூரியில் அமைந்திருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

#TNElections2021WithVikatan | #ElectionResults2021 | #MakkalTheerpu

01 May 2021 3 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்

மக்கள் தீர்ப்பு
மக்கள் தீர்ப்பு

மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்கு எண்ணிக்கைகள் முழுவதுமாக முடிய சற்று தாமதமாகலாம். எனினும் முன்னணி நிலவரங்கள் 11,12 மணியளவில் தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

01 May 2021 3 PM

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த அரசியல் பரபரப்புக்கு விடை கிடைக்கும் நாள் வந்துவிட்டது. தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக்குள் சென்றுவிட்டது.

எனினும், அ.தி,மு.க-வில் இருந்து வந்து, தனியாக கட்சி ஆரம்பித்த டிடிவி. தினகரன் தேமுதிகவுடனும் இன்ன பிற சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates

மாற்றத்துக்கான குரலாக சொல்லிக்கொள்ளும், நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், குறிவைத்ததும் இந்த தேர்தலை தான். நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை களமிறக்கி ஆழம் பார்த்தாலும், இந்த முறை கமலே முதல்வர் வேட்பாளராக களத்தில் நிற்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

சீமானின் நாம் தமிழர் கட்சியும் குறிப்பிடதக்க செல்வாக்கை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க, திமுக கூட்டணிக்குள் சென்றுவிட்டாலும், அமமுக கூட்டணி, ம.நீ.ம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய வாங்கும் வாக்குகள் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக, இம்முறை பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு