Published:Updated:

``பாஜக-வின் மதவெறி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!" - கும்பாபிஷேக விழா தீர்ப்பு பற்றி மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

"மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பா.ஜ.க மத வெறியர்களுக்கு செருப்படி. பா.ஜ.க-வின் மத வெறி அரசியல் தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது." மனோ தங்கராஜ்

``பாஜக-வின் மதவெறி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது!" - கும்பாபிஷேக விழா தீர்ப்பு பற்றி மனோ தங்கராஜ்

"மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பா.ஜ.க மத வெறியர்களுக்கு செருப்படி. பா.ஜ.க-வின் மத வெறி அரசியல் தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது." மனோ தங்கராஜ்

Published:Updated:
மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வேளிமலை குமாரசுவாமி கோயிலில் தேர் வடம்பிடிக்கச் சென்ற தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தினர். அதே போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை வழிபாட்டை தொடங்கிவைக்கச் சென்றபோதும் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், நாளை மறுநாள் (ஜூலை 6) திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தைச் சேர்ந்த சோமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

மதுரை ஐகோர்ட்
மதுரை ஐகோர்ட்

அந்த மனுவில், ``அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவட்டாறில் அமைந்துள்ள இந்தக் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் முடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாந்திரிக விதிப்படி குடமுழுக்கு விழாவின் போது, கலந்துகொள்ளும் ஆண்கள் மேல் சட்டையை கழற்றி விட்டு பங்கேற்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவின்போது இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ``ஹேமலதா அமர்வு, கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் கோயில்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களை நிறுத்தி, அவர்களுடைய மதத்தினை உறுதிசெய்வது பெரும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" எனத் தெரிவித்தனர்.

தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோதங்கராஜ்,
தேர் வடம்பிடித்து இழுக்கும் அமைச்சர் மனோதங்கராஜ்,

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு, அவர் இந்து அல்ல எனவும். ஆனால், அவர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார் எனவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ``பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஏராளமான இந்துக் கடவுள்களின் பாடல்களை பாடியுள்ளார். அவை கோயில்களிலும் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. இந்த விஷயங்களை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

இது பற்றி முகநூலில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், ``எந்த மதத்தினரும் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பா.ஜ.க மத வெறியர்களுக்கு செருப்படி. பா.ஜ.க-வின் மத வெறி அரசியல் தமிழ்நாட்டில் என்றும் எடுபடாது" எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி வழக்கு தொடர்ந்த பிரம்மபுரத்தைச் சேர்ந்த சோமன் கூறுகையில், "உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக முறையீடு செய்வோம்" என்றார். நாளை மறுநாள் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.