தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அடுத்து புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

9 முதல் 12-ம் வகுப்புகள் சுழற்சிமுறையில் வரும் 1.9.2021-ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்.
வரும் 1.9.2021-ம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சிமுறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நடத்த அனுமதி.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வரும் 23.08.2021-ம் தேதி முதல் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி. திரையரங்கப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கடற்கரைக்குச் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரையிலுள்ள கடைகளில் பணியாற்றுபவர்கள், வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திட அந்தப் பகுதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி.
இதுவரை இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்ட அனைத்துக் கடைகளும் வரும் 23.08.2021-ம் தேதியிலிருந்து இரவு 10 மணிவரை இயங்க அனுமதி.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குப் பொதுப் பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதி.
நீச்சல்குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவிகிதப் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி. பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலுள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.
செயல்பட அனுமதி வழங்கப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளைப் பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!