Published:Updated:

`ஆபரேஷன் டிஸ் ஹார்ம்’ - சட்டம், ஒழுங்குப் பிரச்னை கட்டுக்குள் இருக்கிறதா?

ஏற்கெனவே வழக்குகளில் சிக்கிய, ஓராண்டுக்கு மேலாக எவ்விதக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்த 173 பேர் போலீஸாரின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில நாள்களாக, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ரெளடிகள், கூலிப்படையினரின் அட்டகாசங்கள் அதிகரித்துவந்தன. அவர்களை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ்துறையின் உயரதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த நடவடிக்கைக்கு `ஆபரேஷன் டிஸ் ஹார்ம்’, அதாவது, `ஆயுதங்களைப் பறித்தல்’ என்று பெயரிட்டனர். கடந்த 23-ம் தேதி நள்ளிரவு முதல் நடவடிக்கையில் இறங்கினர். ரௌடிகளிடம் இருக்கும் ஆயுங்களைப் பறித்து, அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் இந்த ஆபரேஷனின் நோக்கம். இந்தப் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். கடந்த 52 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க ரெய்டு நடத்தி கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3,325 ரௌடிகளைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து, நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் உட்பட்ட 1,100 ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

இது பற்றி டி.ஜி.பி அலுவலகத்திலுள்ள உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ``கூலிப்படையினர், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டோர், பழைய குற்றவாளிகள் என 21,592 பேரிடம் விசாரணை நடந்தது. அவர்களில் 3,325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் நீதிமன்றத் தடையாணை பிறப்பிக்கப்பட்ட 294 பேர் உட்பட 972 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று 2,353 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வழக்குகளில் சிக்கிய, ஓராண்டுக்கு மேலாக எவ்விதக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்த 173 பேர் போலீஸாரின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். தற்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.

தொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு