Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

புதிதாக உருவான மாவட்டம் ஒன்றின், சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் செல்வமான ஒருவர். இவர் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகப் பதவிவகித்தவர்

கரைவேட்டி டாட் காம்

புதிதாக உருவான மாவட்டம் ஒன்றின், சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் செல்வமான ஒருவர். இவர் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகப் பதவிவகித்தவர்

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

“அந்தப் பணம் என்னாச்சு?”

‘சட்டமன்றத் தேர்தலில், செட்டிநாட்டில் போட்டியிட்ட மன்னர் பிரமுகர்மீது அக்கட்சி நிர்வாகிகளே ‘4 கோடி அபேஸ்’ புகாரை முன்வைத்தார்கள். அந்தப் புகாரைத் தன் செல்வாக்கால் அமுக்கிவைத்திருந்தார் மன்னர் பிரமுகர். ஆனால், அந்த நிர்வாகிகள், தொடர்ந்து தேசியத் தலைமைக்கு இது குறித்துப் புகார் அனுப்ப, “அந்தப் பணம் என்னாச்சு என்று அவரிடம் முறையாக விசாரியுங்கள்!” என்று தமிழகத் தலைமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எதையும் ரஃப் அண்ட் டஃப்பாகச் செய்யும் தமிழகத் தலைமை, தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்பதால்தான், அவர் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் சிரித்த முகத்தோடு வந்து வாண்ட்டடாகக் கலந்துகொள்கிறாராம் மன்னர் பிரமுகர். யாரையும் மதிக்காமல் அசால்ட்டாக டீல் செய்யும் அந்தச் சர்ச்சைப் பிரமுகரின் திடீர் பணிவுதான் கட்சிக்குள் இப்போது ஹாட் டாபிக்!

‘நற நற’ நாமக்கல் அ.தி.மு.க!

நாமக்கல் அ.தி.மு.க நகரக் கழகச் செயலாளராக இருப்பவர் கே.பி.பி.பாஸ்கர். இவர், கடந்த 2011 மற்றும் 2016 என இரண்டு பீரியடுகளில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்தார். ஆனால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக நாமக்கல்லில் நின்று தோல்வியைத் தழுவினார். ‘அதற்குக் காரணம் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான தங்கமணி தரப்பின் உள்ளடி வேலைகள்தான்’ என்று பாஸ்கர் புலம்பினார். சமீபத்தில் தங்கமணி தரப்பு இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டைவிட, அதிக இடங்கள் மற்றும் அதிக முறை தங்கமணி மீதுதான் ரெய்டு நடத்தப்பட்டது. ‘இதற்குப் பின்னணியாக பாஸ்கர் இருந்தார்’ என்று தங்கமணி தரப்பில் புகார் வாசிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘பாஸ்கர் வகிக்கும் நகரச் செயலாளர் பதவியைப் பறிக்க தங்கமணி முயல்வதாக’ பாஸ்கர் ஆதரவாளர்கள் கிசுகிசுக்கிறார்கள். “கட்சிக்குள் இவர்கள் போடுகிற சண்டையில் நாமக்கல்லில் இருக்கிற இடம் தெரியாமலிருந்த தி.மு.க., இப்போ பெருசா வளர்ந்துக்கிட்டிருக்கு!” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்!

கண்டுகொள்ளாத காங்கிரஸ் எம்‌.எல்.ஏ... உஷ்ணத்தில் ஊட்டி மக்கள்!

ஊட்டி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்‌.எல்.ஏ-வாக இருந்துவருகிறார் கணேஷ். 2016 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை ஈஸியாக வீழ்த்தியிருந்தாலும், 2021 தேர்தலில் பா.ஜ‌.க-விடம் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே வெற்றிபெற முடிந்தது. கணேஷ் பெரிதும் நம்பியிருந்த அவரது சமுதாய ஓட்டுகளே கைவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளால்தான் தட்டுத் தடுமாறி கரையேறினார். வெற்றிக்குப் பிறகு, “அவரது சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வம் காட்டும் அளவுக்கு, தொகுதியில் இருக்கும் மற்ற மக்களின் ஏரியாப் பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை” எனக் கொதிக்கிறார்கள் ஊட்டி மக்கள். “பி.ஜே.பி ஆளுங்க வீடு வீடா வந்து கவனிக்குறோம்னு சொன்னாங்க. ஆனா, நாங்க எதுக்கும் கை நீட்டாம, ஸ்டாலின் சொன்ன வார்த்தைக்காகத்தான் இவருக்கு ஓட்டுப்போட்டோம். எங்களோட குறைகளைக் கேட்க ஏரியாப் பக்கம் வரலைன்னாக்கூடப் பரவாயில்லை‌. இந்த வழியாத்தான் தினமும் போறாரு, வர்றாரு. ஆனா, எங்களுக்கு நன்றி சொல்லக்கூட அவருக்கு இன்னும் மனசு வரலை” என்கிறார்கள் ஊட்டி தேவர்சோலை பகுதி மக்கள்!

கரைவேட்டி டாட் காம்

மொழிக்கு விசுவாசம்... நிதிக்குச் சேதாரம்!

தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், டீக்கடை வைக்க உதவி கேட்டு தனது மூன்று சக்கர வாகனத்திலேயே தூத்துக்குடியிலிருந்து சென்னை, தி.நகரிலுள்ள உதயநிதியின் அலுவலகத்துக்குச் சென்றார். அவருக்கு, 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததோடு, தூத்துக்குடி இளைஞரணி நிர்வாகி ஜோயலிடம் ‘கடை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும்படி’ சொன்னார். தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் டீ, ஜூஸ் கடை அமைக்கப்பட்டு, மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு ‘உதய்@நிதி’ என்ற பெயரில் திறக்கப்படவிருந்த நிலையில், கடையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் மேடையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். “மாநகராட்சி சார்பில் கடைக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் பேவர் பிளாக் மேடை அமைத்து கம்பிவேலியும் போட்டிருந்தார். அதனால் இடித்தோம்” என அதிகாரிகள் விளக்கம் சொல்கிறார்கள். “உதயநிதியின் உதவியால் அமைக்கப்பட்டு, திறக்கப்படவிருந்த கடை என்பதால், உள்ளூர் பெண் அமைச்சர் தலையிட்டுப் பேசித் தடுத்திருக்கலாம். ஆனால், உதயநிதி பெயரில் திறக்கப்பட்டால், கனிமொழித் தரப்பு அதிருப்தியாகலாம் என நினைத்து, கனிமொழிக்கு விசுவாசத்தைக் காட்ட அவர் இந்த விவகாரத்தில் தலையிடாமல் அமைதியாக இருந்திருக்கலாம்” என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

“எல்லாமே எம்.எல்.ஏ குடும்பம் எடுத்துக்கிட்டா..?”

புதிதாக உருவான மாவட்டம் ஒன்றின், சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் செல்வமான ஒருவர். இவர் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகப் பதவிவகித்தவர். 2021-ல் இம்முறை பதவிக்கு வந்த குறுகியகாலத்தில், சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேல் அரசு ஒப்பந்தப் பணிகளைத் தனது குடும்பத்தார் பெயர்களில் எடுத்துச் செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. “10 ஆண்டுக்காலமாக அ.தி.மு.க ஆட்சியில் எவ்வித வருமானமும் இல்லாமல் காய்ந்துபோயிருந்தோம். எல்லா ஒப்பந்தப் பணிகளையும் விதிகளை மீறி எம்.எல்.ஏ குடும்பத்தினரே எடுத்துக்கொண்டால், எங்க நிலைமை?” என்று கதறுகிறார்கள் உடன்பிறப்புகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism