Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘‘போதைப்பொருள் வாங்கலியோ... போதைப்பொருள்!’’

சனீஸ்வர பகவான் குடிகொண்டிருக்கும் நகரில், மலர்க் கட்சியின் மாவட்ட வர்த்தக அணிப் பொறுப்பில் இருப்பவர் அவர். டூ வீலர் மூலம் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் போதைப்பொருள்களைக் கூவிக் கூவி விற்பனை செய்வதையே தொழிலாகக் கொண்டவராம். தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக இவர்மீது ஏற்கெனவே ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முறை சிறைக்கும் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இவரை மாவட்டத்துக்குள் நடமாடவிடாமல் இருக்க, 144 தடை உத்தரவு போட கலெக்டருக்குப் பரிந்துரை செய்யவிருந்த நிலையில், தற்போது போதைப்பொருள்கள் மூட்டையுடன் பக்கத்து மாவட்ட போலீஸாரிடம் சிக்கி, கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்!

‘‘அமைச்சர் திருந்தவே மாட்டாரா?’’

முத்து மாவட்டத்தின் ‘பிராணிகள்’ நலத்துறை அமைச்சருக்கு அவரின் உதவியாளர்களும் ஆதரவாளர்களும் பெரிய தலைவலியாக மாறியிருக்கின்றனர் என்கிறார்கள். அமைச்சரின் ‘கிருபை’கொண்ட உதவியாளர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்செந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. பிறகு, அமைச்சரே நேரடியாகத் தலையிட்டு பிரச்னையைச் சுமுகமாகப் பேசி முடித்தார். இந்த நிலையில், வயதான தம்பதியருக்குச் சொந்தமான நில ஆக்கிரமிப்பு விவகாரத்திலும், அமைச்சரின் ‘கிருபை’கொண்ட உதவியாளர் மூக்கை நீட்ட.... பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் புகாரளித்துவிட்டனர். இந்த விவகாரம் அறிவாலயம் வரை செல்ல, “என்ன சொன்னாலும் அவர் திருந்தவே மாட்டாரா... கூட இருக்கறவங்களைக்கூட கன்ட்ரோல்ல வெக்க முடியலைன்னா அவர் என்ன அமைச்சர்?” எனச் சீறியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்!

கரைவேட்டி டாட் காம்

“இப்போ நான் குட்டி பகவதி... அடுத்த பகவதி நான்தான்!”

மலர்க் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியிலிருக்கும் ‘ஆனந்தமான’ நிர்வாகி அவர். கட்சிக்குள் மாஜி காக்கி என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே, “அடுத்த மாநிலத் தலைவர் நான்தான்” என்று பந்தாவாக வலம் வந்துகொண்டிருந்தார். ஆனால், அது நடக்காததால் கடும் அப்செட்டில் இருந்தார். அவரது எண்ண ஓட்டங்களைத் தெரிந்துகொண்ட மாஜி, அவரை ஓரங்கட்ட நினைத்தார். ஆனால், நேரடியாக டெல்லி தலைமையைப் பார்த்து பவர்ஃபுல்லான போஸ்ட்டிங் வாங்கிக்கொண்டு வந்தார் ஆனந்தம். இப்போது அதே மாஜி தலைவரின் பக்கம் யாரையும் நெருங்கவிடாமல் “இப்போ நான் குட்டி பகவதி. அடுத்த பகவதி நான்தான்” என்கிற ரீதியல் பன்ச் வசனம் பேசிவருகிறாராம். அதாவது, அடுத்த மாநிலத் தலைவர் பதவிக்கு இப்போதே அடிபோடத் தொடங்கிவிட்டாராம் அவர்!

கலக்கத்தில், ‘இலைக் கட்சி’ பிரதிநிதி!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குடும்பத்தில், குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, கடலூர் மாவட்டச் சமூகநல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் அடிப்படையில், தீட்சிதர்கள் உள்ளிட்ட நான்கு பேர்மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர் சிதம்பரம் போலீஸார். அந்தத் திருமணத்தை, மன்னர் பெயர்கொண்ட இலைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய ‘பிரதிநிதி’ ஒருவர் முன்னின்று நடத்தியதுடன், மணமக்களையும் வாழ்த்திவிட்டு வந்திருந்தாராம். அந்த ‘முக்கியப் பிரதிநிதியைச் சாட்சியாகச் சேர்க்கலாமா அல்லது வழக்கிலேயே சேர்த்துவிடலாமா...’ என்று மேலிடத்தில் ஆலோசனை கேட்டிருக்கிறதாம் கடலூர் மாவட்டக் காவல்துறை. அதனால், கலக்கத்தில் இருக்கிறாராம் அந்த இலைக் கட்சிப் பிரதிநிதி!

கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

‘வடைச்சட்டி’ அரசியலும், ‘கிண்டல்’ போஸ்டரும்!

‘விருது’ மாவட்டத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், தனக்குக் கிடைக்கும் நேரங்களில் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிவருகிறார். இப்படி ஒருமுறை வாக்காளர்களைச் சந்தித்து நன்றி கூறிய அமைச்சர், உடன்பிறப்புகள் மூலமாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் ‘வடைச்சட்டி’ பரிசாக வழங்கியிருக்கிறார். இதையறிந்த மலர் கட்சியினர், ‘வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாதவர்கள் வாக்காளர்களுக்கு வடைச்சட்டி வழங்கி வந்தனம் செய்கிறார்கள்’ எனக் கிண்டல் போஸ்டர் அடித்து ஒட்ட, ஊருக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. பிறகு, விஷயம் வெளியில் பரவாமல் இருக்க, போஸ்டர்களையெல்லாம் மறைக்கச்சொல்லி உத்தரவாம்!