Published:Updated:

Tamil News Today: கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து; 5 பேர் பலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து
பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து

26-10-2021| இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Oct 2021 11 PM

பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சமும் எழுந்துள்ளது.

Tamil News Today: கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து; 5 பேர் பலி!

விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில், ``கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

26 Oct 2021 12 PM

Tamil News Today: `ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி செல்ல மாட்டோம்!' - அப்போலோ

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

`ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி செல்ல மாட்டோம்’ என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது நம்பிக்கை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை குற்றம்சாட்டியிருக்கிறது.

26 Oct 2021 11 AM

`நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த மாதாந்தர அறிக்கை!' - திமுக அரசை வலியுறுத்தும் கமல்

`தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த விவரங்களை திமுக அரசு வெளியிட வேண்டும்’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாகக் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `` திமுக தனது தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைத்து இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னும் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதில் குறிப்பாக திமுக-வின் 491-ம் தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்தக் குறிப்பிட்ட வாக்குறுதியில், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற, திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் என்று திமுக குறிப்பிட்டிருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால், இன்றளவும் அந்தச் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படவில்லை. அதேபோல், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் விசாரிக்கப்பட்டு, தீர்வுகாணப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பெறப்பட்ட புகார்கள் விரைந்து முடிக்கப்படவில்லை. எனவே, திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில் எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான மாதாந்தர அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு