Published:Updated:

Tamil News Today Live : `யார் கர்நாடக முதல்வர்?' - பெங்களூருவில் கூடிய எம்.எல்.ஏ-க்கள்!

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
Live Update
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

Tamil News Today Live : 14-05-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

14 May 2023 7 PM

`டி.கே.சிவக்குமாரை முதல்வராக நியமியுங்கள்!' - ஒக்கலிகா சாமியார் வேண்டுகோள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பெங்களூருவிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில், முதல்வர் யார் என்பதை முடிவுசெய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவின் ஆதி சுஞ்சனகிரியைச் சேர்ந்த பிரபல ஒக்கலிகா சாமியார் நிர்மலானந்த நாத சுவாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை மாநிலத்தின் அடுத்த முதல்வராக நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

14 May 2023 7 PM

விழுப்புரம்: காரணமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

கள்ளச்சாராயம்!
கள்ளச்சாராயம்!
மாதிரிப் படம்

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இன்று மாலை 3 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழப்பு. அதன் காரணமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

14 May 2023 6 PM

Tamil News Today Live : `யார் கர்நாடக முதல்வர்?' - பெங்களூருவில் கூடிய எம்.எல்.ஏ-க்கள்!

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்னும் சற்று நேரத்தில் `யார் கர்நாடக முதல்வர்?' என்பதை முடிவு செய்யவிருக்கின்றனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியில் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும், சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும் கோஷமிட்டு வருகின்றனர்.

14 May 2023 2 PM

கள்ளச்சாராயம் குடித்து மூவர் இறந்த விவகாரம்; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம்:

மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மூவர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

14 May 2023 11 AM

`கர்நாடக மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் காங்கிரஸுக்கு வாழ்த்துகள்!' - அண்ணாமலை

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``கர்நாடக மக்கள் அளித்த ஆதரவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வாழ்த்துகள். கடின உழைப்பாளிகள், தலைவர்கள் இருக்கும் கர்நாடக பா.ஜ.க-வுடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியம்.

அண்ணாமலை
அண்ணாமலை

நாம் வலுவாக மீண்டு வருவோம்! கர்நாடக மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பிரதமர் மோடி, இந்திய பா.ஜ.க-வின் குரலுக்கு பணிவுடன் செவிசாய்ப்போம். உங்கள் நம்பிக்கையைப் பெற நாங்கள் தொடர்ந்து உழைப்போம்" என காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

14 May 2023 9 AM

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கை விவரங்கள், வாக்குச்சாவடி குழுக்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

14 May 2023 8 AM

`முதல்வர் யார்?' - எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்!

நடந்து முடிந்த கார்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி இமாலய சாதனை புரிந்திருக்கிறது. மோடி அலை, இந்துத்துவ பிரசாரம், மேலிட தலைவர்களின் ரோடு ஷோக்கள் என பா.ஜ.க-வினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த முறை பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கர்நாடகத் தேர்தல்
கர்நாடகத் தேர்தல்

காங்கிரஸ்-பா.ஜ.க-வுக்கிடையே இழுபறி நீடிக்கும், அந்த நேரத்தில் குமாரசாமியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தேர்தலுக்கு முந்தைய, பிந்தையக் கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸின் `கை'க்குள் கர்நாடகம் முழுவதுமாக அடங்கியிருக்கிறது. கடும் போட்டியாளராகக் கருதப்பட்ட பா.ஜ.க 64 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெறும் 19 இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. அதனால், `கிங் மேக்கர்' உதவியின்றி `சோலோ கிங்'காக காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
ட்விட்டர்

வெற்றியைத் தொடர்ந்து, `முதல்வர்' யார் என்ற கேள்வி காங்கிரஸ் முகாமில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. சீனியாரிட்டி அடிப்படையில் சித்தராமையாவும், இந்தத் தேர்தல் வெற்றிக்காக பெரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு விடைபெற்றார். இந்த நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதைக் கலந்து பேசி முடிவெடுக்க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்புவிடுத்திருக்கிறது.