Published:Updated:

`என் வாழ்க்கையில் அது ஒரு ரணமான விஷயம்!’ - கண்கலங்கிய தமிழிசை

கலிலுல்லா.ச

``விமர்சனங்களை தாங்கிக்கொண்டால், விமரிசையாக வாழலாம் எனபதற்கு நான் ஒரு உதாரணம்”

Tamilisai
Tamilisai ( கே.ஜெரோம் )

தெலங்கானவின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கபட்டுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசைக்குப் புதிய பொறுப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பெண் தலைவர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக பா.ஜ.கவுக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை உள்ளது. அடுத்த பா.ஜ.கவின் தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!
tamilisai
tamilisai

இந்நிலையில், சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தெலங்கானா மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி. நான் தேர்ந்தெடுத்த பாதைக்காக காங்கிரஸ் தலைவரான அப்பாவை விட்டுக்கொடுக்க நேர்ந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.கவில் என்னை இணைத்துக்கொண்டு, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், பா.ஜ.கவில் தடம் பதிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய சவாலாக இருந்தது.

என்னுடைய பாதைக்காக, பாசத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய, அன்பான தொண்டர்களுக்காக அப்பாவை விட்டுக் கொடுக்கவேண்டிய நிலை வந்தது. அது என் வாழ்க்கையில் ரணமான விஷயம். ஆனால், இன்று என் தந்தையே இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்வார். செய்தியை அறிந்ததும், நான் வரவேண்டும் என்று எண்ணியது பா.ஜ.க அலுவலகம்தான். காரணம் இது எனக்கு ஒரு கோயில். தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவேன்.

`என் வாழ்க்கையில் அது ஒரு ரணமான விஷயம்!’ - கண்கலங்கிய தமிழிசை

உங்கள் சகோதரி தெலங்கானவில் இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். அறிவிப்பு வந்தவுடன், நான் பா.ஜ.கவின் உறுப்பினர் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஒரு தலைவராக இருந்து, அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்த்து. அதே உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்பது மகிழ்ச்சி கலந்த ஒரு உணர்வு. எப்போதும் கடைப்பிடிப்பது எளிமையான வாழ்க்கையைத்தான். எப்போதும் தமிழிசைதான். விமர்சனங்களை தாங்கிக்கொண்டால், விமரிசையாக வாழலாம் எனபதற்கு நான் ஒரு உதாரணம்” என்றார்.