Published:Updated:

"நான் எல்லாத்தையும் வாட்ச் பண்றேன்!" - அண்ணாமலை வாட்ச் சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

``தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது. நீங்கள் முதல்வராக இருந்தபோது நல்ல கல்வியை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், நாங்கள் அதை செய்கிறோம்." - தமிழிசை சௌந்தரராஜன்

"நான் எல்லாத்தையும் வாட்ச் பண்றேன்!" - அண்ணாமலை வாட்ச் சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

``தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது. நீங்கள் முதல்வராக இருந்தபோது நல்ல கல்வியை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், நாங்கள் அதை செய்கிறோம்." - தமிழிசை சௌந்தரராஜன்

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

கோவை தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “பாரத பிரதமர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார். அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.

தமிழிசை
தமிழிசை

அதற்கு நாம் பாடுபடுவோம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும். புதுச்சேரியை பொறுத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி, மலையாள பாட கல்வி, ஆந்திர வழி பாட கல்வி என மூன்று விதமான கல்வி உள்ளன.

எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்றுதான் சி.பி.எஸ்.இ கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தனியார் பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்ற மனநிலையில் சில அரசியல்வாதிகள் உள்ளனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தமிழ் படிப்பதை தமிழிசை தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாராயணசாமி
நாராயணசாமி

அதை நான் வன்மையாக மறுக்கிறேன். தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது.  நீங்கள் முதல்வராக இருந்தபோது நல்ல கல்வியை கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், நாங்கள் அதை செய்கிறோம்.

இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது அவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கத்தான். எதைக் கொண்டு வந்தாலும் வேண்டாம் என அரசியல்வாதிகள் சொல்ல வேண்டாம். அதைக் குழந்தைகளும், கல்வியாளர்களும்தான் சொல்ல வேண்டும். நாராயணசாமியைவிட எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. நாரயணசாமி என்னைப் பற்றி காட்டமாகப் பேசுகிறார்.

புதுச்சேரி
புதுச்சேரி

நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியை கொண்டு வர முடியவில்லை. ஆகவே அவற்றை நான் முழுவதுமாக புறம் தள்ளுகிறேன்.” என்றவரிடம் அண்ணாமலை வாட்ச் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு தமிழிசை, “நான் எல்லாத்தையும் வாட்ச் பண்றேன்” என சிரித்தபடி எழுந்து சென்றார்.