Published:Updated:

``ஆளுநரை மாற்ற கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது'' - ஆளுநர் தமிழிசை காட்டம்

தமிழிசை சௌந்தரராஜன்

"மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்துக்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்." - தமிழிசை

``ஆளுநரை மாற்ற கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது'' - ஆளுநர் தமிழிசை காட்டம்

"மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்துக்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்." - தமிழிசை

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுவை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ``மக்கள் சந்திப்பின்போது மாற்றுத்தினாளி பெண் ஒருவர் தனக்கு ஒரு வேலையும், மூன்று சக்கர வாகனமும் வேண்டும் எனக் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும். இதுதான் மக்கள் சந்திப்பின் பலன்.

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய தமிழிசை.
மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய தமிழிசை.
அ.குரூஸ்தனம்

'ஏன் மக்களைச் சந்திக்கிறீர்கள்... உங்களுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது... தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் மக்களைச் சந்திக்க வேண்டும்' எனக் கூறுபவர்களுக்கு இந்தச் செயல்தான் எனது பதில். இதுபோல மக்களைச் சந்திக்கும்போது அவர்களது சிறிய சிறிய தேவைகளை நமது நோக்கத்தால், முயற்சியால் ஓரளவு சரிசெய்ய முடியும். எங்களால் உடனே சரிசெய்துவிடக்கூடிய இன்னும் பல கோரிக்கைகளைச் சரிசெய்திருக்கிறோம். ஜிப்மரில் கேட்ட உதவியைச் செய்திருக்கிறோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்துக்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும்..!

மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அது அவசியம் என்பதை நான் பதிவுசெய்கிறேன். தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது. மழை வெள்ளத்தால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, புதுவை அனைத்துவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கும்.

ஆளுநர்  ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுமக்கள் மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாந்தி போன்ற அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். விஷப்பூச்சிகள் அதிகம் வரும் என்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளைக் கையாளும்போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், இந்த மழைநாள்களில் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்" என்றார்.