Published:Updated:

``ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரமே போதுமானது; கூடுதல் அதிகாரம் தேவையில்லை” - ஆளுநர் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்

``ஆளுநர்களுக்கு எப்போதும் இருக்கும் அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரமெல்லாம் தேவையில்லை” என்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

``ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரமே போதுமானது; கூடுதல் அதிகாரம் தேவையில்லை” - ஆளுநர் தமிழிசை

``ஆளுநர்களுக்கு எப்போதும் இருக்கும் அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரமெல்லாம் தேவையில்லை” என்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவரின் ஆயுர்வேத மருத்துவமனையை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நாம் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை தாண்டியிருக்கிறோம். இதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் புகழ் ஓங்கியிருக்கிறது.

ஜூலை 15-ம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனாவே காணாமல்போனது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவி ஏற்றுக்கொள்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில் உண்மையான சமூகநீதி, அவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கியதால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

ஆனால், சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும் சிலர், சமூகநீதியைப் பெயரளவில் மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்தது ஓர் உதாரணம்.

ஓர் இடத்தில் பேசும்போது, தேசிய கல்விக் கொள்கை தேவை என்று பேசினேன். தாய்மொழியுடன், இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை எனக் கூறியிருந்தேன். அதைத்தான் தேசிய கல்விக் கொள்கையும் சொல்கிறது.

இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்பகால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக்கொள்ளலாம். தாய்மொழி, தாய்மொழி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களின் குழந்தைகள்கூட தாய்மொழியில் கல்வி கற்பது இல்லை. இன்னொரு மொழியைக் கற்பது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றுதான் நான் சொன்னேன். உடனே இணையதளத்தில் இந்தியைத் திணிக்கிறார்கள் என்பதுபோல விமர்சனப் பதிவுகளைப் பதிவிடுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தமிழ்நாட்டில் ஏன் வாலை நீட்டுகிறார்கள்?’ எனக் கேட்கிறார்கள். வாலை மட்டுமல்ல... என் உயிர் போனாலும் தமிழகத்தில்தான் போகும். நான் ஒரு தமிழச்சி, வேறு மாநிலத்துக்குப் பணி நிமித்தமாகச் சென்றிருக்கிறேன். ஆனால், நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அதைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. என் பெயரில் மட்டுமல்ல... எனது உயிரிலும் தமிழ் இருக்கிறது. என்னை எதிர்த்து பேசுபவர்கள் முதலில் முழுமையாக, தமிழைப் பிழை இல்லாம் பேசத் தெரியாதவர்கள். எல்லோரும் அரசியல்வாதிகளாக கவர்னர்களைப் பார்க்கின்றனர். கவர்னர்கள் அரசியல் செய்வதில்லை. கவர்னர்கள் ஆட்சி அதிகாரத்தை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், அதை மற்றவர்கள் அரசியல் ஆக்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

`புதுச்சேரியில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது. துணைநிலை ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறது’ எனமு ன்னாள் முதல்வர் குற்றம் சொல்கிறார்.

அவருக்கு என்ன இப்ப கஷ்டம் என்றால், துணைநிலை ஆளுநரும் முதல்வரும் இணைந்து செயலாற்றுவதுபோல் இல்லாமல், `நாம் சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்களே...’ என்ற எரிச்சலில் முன்னாள் புதுச்சேரி முதல்வர் குற்றம் சுமத்துகிறார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். நான் அவருக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறேன். இதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரச்னைகள் இல்லை. புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் இணைந்துதான் செயல்பட வேண்டும்.

``ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரமே போதுமானது; கூடுதல் அதிகாரம் தேவையில்லை” -  ஆளுநர் தமிழிசை

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படும் நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர் முருகனைக் கூப்பிட்டதுதான், சிலருக்குப் பிரச்னை. அடித்தட்டிலிருந்து உழைத்து, உயர்ந்த இடத்துக்கு வந்தவர் முருகன். அவர் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வார் என அவரை அழைத்ததில் ஒன்றும் தவறில்லை. இந்திய அரசாட்சியில் உள்ள ஓர் அமைச்சரை பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு உயர்க்கல்வி அமைச்சரின் பெயர் அழைப்பிதழைல் இருந்ததா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அழைப்பிதழில் பெயர் இருந்தால்கூட சில நேரங்களில் அவர்கள் வருவதில்லையே... கவர்னர்களுக்கு வேந்தர் என்ற ஒரு பொறுப்பு கொடுத்திருப்பதை அரசியலாக்கிவிடக் கூடாது. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்த்தால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்... பட்டமளிப்பு விழாக்களையே அரசியல் ஆக்கினால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்... அவர்களுக்கு நல்லதை விதையுங்கள் என்பதே எனது கருத்து. ஆளுநர்களுக்கு எப்போதும் உள்ள அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரமெல்லாம் தேவையில்லை. அதை மதியுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்" என்கிறார்.