Published:Updated:

`அட என் படமும் வந்திருக்கே..' - கலகல சீனிவாசன் | `சொன்னதில் என்ன தவறு?' - சீறிய முதல்வர்

தமிழ்நாடு சட்டப்பேரவை - முதல்வர் ஸ்டாலின் ( கோப்புப் படம் )

“அவர் (உதயநிதி) மரியாதை இல்லாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் நானே அவைக்குறிப்பிலிருந்து நீக்க பரிந்துரைக்கிறேன். அவர் 'திரு' என மரியாதையாகப் பேசியதில் என்ன தவறு... அவரின் பெயர் என்ன தகாத வார்த்தையா?" - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:

`அட என் படமும் வந்திருக்கே..' - கலகல சீனிவாசன் | `சொன்னதில் என்ன தவறு?' - சீறிய முதல்வர்

“அவர் (உதயநிதி) மரியாதை இல்லாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் நானே அவைக்குறிப்பிலிருந்து நீக்க பரிந்துரைக்கிறேன். அவர் 'திரு' என மரியாதையாகப் பேசியதில் என்ன தவறு... அவரின் பெயர் என்ன தகாத வார்த்தையா?" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவை - முதல்வர் ஸ்டாலின் ( கோப்புப் படம் )

இன்று சட்டசபையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்தும், அமித் ஷா தொடர்பாகவும் காரசார விவாதங்கள் நடந்தன. அனைத்து விவாதங்களிலும் எல்லாக் கேள்விகளுக்கும் ’ஒன் மேன்’ ஆர்மியாக பதில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நேற்று சட்டசபையில் வன்னியர்களுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி பேச அனுமதி கேட்டார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அது தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஜி.கே.மணி கொண்டுவந்தார். அப்போது பேசியவர், "அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருப்பதால், இட ஒதுக்கீடு கொண்டுவராமல் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் சமூக மக்களால் சேர முடியாது. தமிழகத்தில் பெரும்பான்மை சமூகமாக வாழும் வன்னியர்கள் முன்னேறாமல் தமிழகம் எப்படி முன்னேறும்?" என்னும் கேள்வியை முன்வைத்தார். ``எனவே, உடனடியாகக் கொண்டுவர வேண்டும்" என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.

 ஜி.கே.மணி
ஜி.கே.மணி

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கலைஞர் ஆட்சியில் 69% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்ததில் முகாந்திரம் இருக்கிறதா என்பது உறுதியாகவில்லை. இதனால், இட ஒதுக்கீடுக்கு நீதிமன்றம் தடைவிதித்தபோதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் கேட்டுக்கொண்டதால், ஆறு மாதகாலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.10.5% உள் இட ஒதுக்கீட்டால் வன்னியர் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்போம்" என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்குப் பேச அனுமதி வழங்கப்பட்டது. அவர், ``இட ஒதுக்கீடு கொண்டுவந்து சமூகநீதியைக் காத்தது தி.மு.க கட்சி. கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் உரிமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அவகாசத்தை முதல்வர் நீட்டி வழங்கியிருக்கிறார்” எனப் பேசினார்.

அப்போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் முனுசாமி, “இது ஓர் உணர்வுபூர்வமான பிரச்னை. இதை முறையாகக் கையாள வேண்டும். இதற்கு முறையான விளக்கத்தை முதலமைச்சரும், அவை முன்னவரும் சரியான கருத்துகளை முன்வைத்தனர்.

ஆனால், வேல்முருகன் பேசிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். அது அவர் சொன்ன தனிப்பட்ட கருத்தல்ல” எனச் சாடினார்.

அப்போது எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், “அவர் தவறாக எதுவும் பேசவில்லை. எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. அப்படிப் பேசியிருந்தால், அவர் சொன்னதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால், அப்படி எதுவும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை” எனப் பேசினார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

அதையடுத்து, ``11.4.2023 அன்று விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பாஸ் கேட்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரின் மகன் ஜெய் ஷா குறித்துப் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். நான் அதைக் குறையாகச் சொல்லவில்லை” என பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்தார்.

அதற்கு முதல்வர், “அவர் மரியாதை இல்லாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் நானே அவைக்குறிப்பிலிருந்து நீக்க பரிந்துரைக்கிறேன். அவர் 'திரு' என மரியாதையாகப் பேசியதில் என்ன தவறு... அவரின் பெயர் என்ன தகாத வார்த்தையா" என்றார். அமைச்சர் உதயநிதி பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க மறுத்ததால், பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.