Published:Updated:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: `சிங்காரச் சென்னை 2.0 முதல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு வரை!’ -ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

ஆளுநர் உரை
Live Update
ஆளுநர் உரை

16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

21 Jun 2021 10 AM

``சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்!”

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,``கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்த மூன்று மாத காலம், கால அவகாசம் நீட்டிப்பு.

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம்தோறும் நிறுவப்படும்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: `சிங்காரச் சென்னை 2.0 முதல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு வரை!’ -ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்த, தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்.

2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்.

`எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூக தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்

`சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும்!

சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் `சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம்தோறும் நிறுவப்படும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.

லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர் அளிக்கப்படும்" என்றார்

21 Jun 2021 10 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தமிழகப் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற...

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில், தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை

தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

``கச்சத்தீவை மீட்பது, மீனவர்நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்குத் தீர்வுகாண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.”
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழக உரிமைகளைப் பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்கவும், அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்” என்றார் ஆளுநர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
21 Jun 2021 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``துணை நகரங்கள் உருவாக்கப்படும்!”

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,``திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, கொரோனா மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் அலையைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது.”

``பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.”
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
21 Jun 2021 10 AM

`நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு!’

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,``தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரையைப் பெற்று, சட்ட முன்வடிவு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம்” என்றார்.

தொடர்ந்து, ``தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழக நிதிநிலை குறித்த தற்போதைய உண்மை நிலையை மக்களுக்கு வெள்ளை அறிக்கை விளக்கும். தமிழகத்தின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருக்கும் சூழலில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவிருக்கிறது” என்றார்.

21 Jun 2021 10 AM

`ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்!’

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: `சிங்காரச் சென்னை 2.0 முதல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு வரை!’ -ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். `உறவுக்குக் கை கொடுப்போம்... உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்” என்றார்.

21 Jun 2021 10 AM

`உழவர் சந்தைகள்’

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாகக்கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்” என்றார்.

21 Jun 2021 10 AM

 ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர்!

ஆளுநர்
ஆளுநர்

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையை, ``வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார்.

21 Jun 2021 8 AM

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைபற்றியது. அதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் 21-ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9-ம் தேதி அறிவித்தார். அதன்படி 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

சட்டசபை
சட்டசபை

கடந்த வாரம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்தார். சட்டசபை மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். காலை 10 மணிக்கு ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனை தொடர்ந்து, அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசிப்பார். அதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism