Published:Updated:

திமுக-வுக்கு எதிராகப் போராட்டம்; பாஜக கேட்டது 7 இடங்கள்... ஓர் இடத்தில் மட்டுமே காவல்துறை அனுமதி!

பாஜக போராட்டம் ( கோப்புப் படம் )

தமிழ்நாடு முழுவதும் ஆளும் அரசை எதிர்த்து பா.ஜ.க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், சென்னையில் ஓர் இடத்தில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக-வுக்கு எதிராகப் போராட்டம்; பாஜக கேட்டது 7 இடங்கள்... ஓர் இடத்தில் மட்டுமே காவல்துறை அனுமதி!

தமிழ்நாடு முழுவதும் ஆளும் அரசை எதிர்த்து பா.ஜ.க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், சென்னையில் ஓர் இடத்தில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பாஜக போராட்டம் ( கோப்புப் படம் )

ஆளும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் நாளை (ஜூலை 5) மாநிலம் முழுதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டத்தைத் தலைமை தாங்கும் நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைமை வெளியிட்டிருந்தது. தலைநகர் சென்னையில் பா.ஜ.க சார்பில் ஏழு இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

பாஜக உண்ணாவிரதப் போராட்டம்
பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் ஏழு இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக காவல்துறையினர் ஒரு இடத்தில் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியிருக்கின்றனர். அதனால், நாளை வள்ளுவர் கோட்டம் அருகே மட்டும் போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னையைப் பொறுத்தவரை, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், வள்ளுவர் கோட்டம் அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேப்பாக்கம் போன்ற பகுதிகளில் மட்டும் அனுமதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.