Published:Updated:

``ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்கிறோம்; ரெய்டு திமுக-வின் இந்த மாத கோட்டா!” - சொல்கிறார் அண்ணாமலை

அண்ணாமலை

`குடியரசு தினத்தன்று காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜ.க வரவேற்கிறது’ எனத் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை கூறியுள்ளார்.

``ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்கிறோம்; ரெய்டு திமுக-வின் இந்த மாத கோட்டா!” - சொல்கிறார் அண்ணாமலை

`குடியரசு தினத்தன்று காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜ.க வரவேற்கிறது’ எனத் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை கூறியுள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, தமிழகம் சார்பில் தயார்செய்யப்பட்டிருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருந்தது. தமிழக அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரம், வீரமங்கை வேலு நாச்சியார், மகாகவி பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோர் தேசிய அளவில் பிரபலமில்லாதவர்கள் எனக் காரணம் கூறி நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் பல்வேறு தலைவர்களால் கண்டனத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அதே அலங்கார ஊர்தியானது, தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்படும் என்றும், இந்த ஊர்தி தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் செல்லும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
ஃபேஸ்புக்

இதையடுத்து குடியரசு தினத்தன்று தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்தியின் படமும் வெளியாகியிருந்தது. அதில் ஊர்தியின் முகப்பில் வ.உ.சி நிற்பது போன்றும், அதற்கடுத்து பாரதியார் முழக்கமிடுவது போன்றும், ஊர்தியின் நடுவில் வீர மங்கை வேலு நாச்சியார் குதிரை மேல் வாளுடன் இருப்பது போன்றும், பின்னால் மருது சகோதரர்கள் நிற்பது போன்றும் அலங்கார ஊர்தியின் படங்கள் இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, தமிழகத்தில் குடியரசு தினத்தன்று காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜ.க வரவேற்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து பேசுகையில், ``கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை என்பது தி.மு.க-வின் இந்த மாத கோட்டா” என்று விமர்சித்துள்ளார். மேலும், ``குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும், தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism