Published:Updated:

``பாஜக எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது” - அண்ணாமலை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

``பாஜக-வைப் பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது. இங்கு தனிமனிதனுக்கு வேலை கிடையாது.'' - பாஜக தலைவர் அண்ணாமலை

``பாஜக எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது” - அண்ணாமலை

``பாஜக-வைப் பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது. இங்கு தனிமனிதனுக்கு வேலை கிடையாது.'' - பாஜக தலைவர் அண்ணாமலை

Published:Updated:
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்ய சபா நியமன எம்.பி-யாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ஆந்திராவைச் சேர்ந்த திரைப்படக் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட நான்கு பேர் தேர்வுசெய்யப்பட்டு எம்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளையராஜவுக்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, `` `மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் இளையராஜா, அந்த முன்னுரையில் அம்பேத்கரின் வாழ்வியல் சித்தாந்தங்களை, நரேந்திர மோடி செய்துகொண்டிருக்கிறார் எனக் கூறினார். அதே இளையராஜா கோவையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று மாநில அரசைப் பற்றிக்கூடப் பேசியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியைப் பற்றிப் பேசினாலும், அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்து. இதில் அரசியலைக் கலக்கவேண்டிய அவசியம் இல்லை.

இளையராஜா
இளையராஜா

அவருடைய பார்வையை அவர் வெளிப்படுத்துகிறார். இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஓர் அங்கீகாரத்தைக்கூட இதைப்போல கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் அவரைத் தேவையில்லாமல் விமர்சிப்பதை விட்டுவிட்டு, அவரை வாழ்த்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இளையராஜாவை சாதி, மதத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் எதற்குள்ளும் அடங்காத மாமனிதர்.

பாஜக-வைப் பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது. இங்கு தனிமனிதனுக்கு வேலை கிடையாது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை புதியவர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டேயிருக்கும். பாஜக மக்களின் ஆதரவைப் பெற்றே ஆட்சிக்கு வர நினைக்கிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!