Published:Updated:

``ரஜினியிடம், ஆளுநர் ரவி அரசியல் பேசியதில் என்ன தவறு..!" - அண்ணாமலை

அண்ணாமலை| பா.ஜ.க

``தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்." - அண்ணாமலை

``ரஜினியிடம், ஆளுநர் ரவி அரசியல் பேசியதில் என்ன தவறு..!" - அண்ணாமலை

``தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை| பா.ஜ.க

``தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்" என பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ``நம்முடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாட தேசியக்கொடியை நம் இல்லங்களில் ஏற்றுகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடி வரவழைக்கப்பட்டு, பா.ஜ.க அலுவலகத்தில் ஏற்றப்படும்.

ஒரு சில தலைவர்கள் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவதைக்கூட அரசியலாக்குகிறார்கள். அவர்களின் சிந்தனை எந்த அளவுக்கு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஆளுநர் ரவி - ரஜினி
ஆளுநர் ரவி - ரஜினி

தமிழ்நாட்டில் இருக்கிற முக்கியமான மனிதர்களில் ஒருவர் ரஜினிகாந்த. பல கோடி மக்களின் அன்பைப் பெற்றவர். தமிழ்நாட்டின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ஆளுநர் பல இடங்களில் பல மனிதர்களைச் சந்தித்து வருகிறார்.

ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, `நான் ஆளுநரைச் சந்தித்தபோது, இருவரும் அரசியல் குறித்து விவாதித்தோம்' என்று கூறினார். ஆளுநர் ரவி, ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்.

அண்ணாமலை| பா.ஜ.க
அண்ணாமலை| பா.ஜ.க

கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க-வின் பி.டீமாகச் செயல்படுகிற, அந்தக் கட்சி கொடுக்கிற ஆக்ஸிஜனை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற சில கட்சித் தலைவர்கள் தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக ரஜினி அவர்களை விமர்சித்திருக்கிறார்கள். ரஜினி, `நான் அரசியல் பேசினேன்!' என்று கூறுவது, சமுதாயத்தில் நடக்கக்கூடிய விசியங்களைக் குறித்துப் பேசினோம் என்றுதான் அர்த்தம்'' என்றார்.