Published:Updated:

``செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் இப்படி கூறட்டும்... இனி அவரைப் பற்றி பேசவேமாட்டேன்!" - அண்ணாமலை

அண்ணாமலை

``ஆடத் தெரியாதவர் மேடையைப் பார்த்து கோணல் என்று சொன்னது போல... ஜி.எஸ்.டி அமைப்பு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் குறைசொல்கிறார்.'' - அண்ணாமலை

``செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் இப்படி கூறட்டும்... இனி அவரைப் பற்றி பேசவேமாட்டேன்!" - அண்ணாமலை

``ஆடத் தெரியாதவர் மேடையைப் பார்த்து கோணல் என்று சொன்னது போல... ஜி.எஸ்.டி அமைப்பு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் குறைசொல்கிறார்.'' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோதும், தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு குறைத்துவிட்டது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``சரியாக அரசை நிர்வகிக்கத் தெரியாதவர்கள் மேடை சரியாக இல்லை, மேடை கோணலாக இருக்கிறது என்று சொல்வார்கள். அது போல இருக்கிறது தமிழ்நாடு நிதியமைச்சரின் அறிக்கை. தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு மத்திய அரசை எப்படி குறை சொல்ல முடியும்? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசின் பொய்களை தோலுரித்துக் காட்டினார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைப்பே சரியில்லை என நிதியமைச்சர் தனது அறிக்கையில் திடமாகக் கூறியிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மத்திய நிதியமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போது எதற்காக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தார்கள் என்பது குறித்து இதுவரை பதில் கிடையாது... எல்லா கேள்விகளுக்கும் நிதி அமைச்சர் பதில் சொல்ல தயாராக இருந்த போதும், அந்த பதிலைக் கேட்பதற்கு நீங்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டு மக்களை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். நம்முடைய எம்.பி-க்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தொடர்ந்து பேசியவர், ``செந்தில் பாலாஜி என்மீது மூன்று மான நஷ்ட வழக்குகள் போட்டிருக்கிறார். மானம், மரியாதை இருப்பவர்கள் மான நஷ்ட வழக்கு போட்டால் அதற்கு ஒரு மரியாதை கொடுக்கலாம் . மானம் இல்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போட்டால் அதற்கு என்ன மரியாதை? மின் கட்டணம் குறித்து புகார் கூறும் பா.ஜ.க தொண்டர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக என்மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

முன்பு கரூரில் பேசிய ஸ்டாலின், `உலகிலேயே பெரிய ஃபிராடு செந்தில் பாலாஜிதான். அவரை வைத்துக்கொண்டு ஜெயலலிதா ஆட்சி செய்கிறார்' என்றார். தற்போது முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின், `நான் அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி பேசியது தவறு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினால், இந்த அமைச்சரை பற்றி இனி ஒரு வார்த்தைகூட நான் பேசமாட்டேன். மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நல்லவர், உலக மகா உத்தமர் என்று முதலமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினால், இனிமேல் அரசியலில் இருக்கும்வரை மின்சாரத்துறை அமைச்சர் என்ற வார்த்தை என் வாயிலிருந்து வராது'' என்றார்.