Published:Updated:

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் இயேசுநாதர் அல்ல; திருப்பி அடிப்பேன்!" - அண்ணாமலை

அண்ணாமலை| பா.ஜ.க

``நீங்கள் என்னை மிரட்டிப் பார்த்தால் என்னுடைய பதிலடி வேறு மாதிரி இருக்கும்.'' - அண்ணாமலை

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் இயேசுநாதர் அல்ல; திருப்பி அடிப்பேன்!" - அண்ணாமலை

``நீங்கள் என்னை மிரட்டிப் பார்த்தால் என்னுடைய பதிலடி வேறு மாதிரி இருக்கும்.'' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை| பா.ஜ.க

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதன்முதலாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையை அறிவித்தது தி.மு.க அரசுதான். அப்போது அண்ணா முதலமைச்சராக இருந்தார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததன் மூலம் தி.மு.க., அண்ணாவின் கொள்கைகளிலிருந்து எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பா.ஜ.க இந்து மக்களை மட்டும் சார்ந்த கட்சி அல்ல... அனைத்து மக்களையும் சார்ந்த கட்சி என்று ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் மத அரசியல் செய்துவருகிறார் என்பது மேலும் ஒரு முறை ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது. பா.ஜ.க மத அரசியல் செய்கிறது என்று கூறுவதற்கு அவருக்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது.

பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு பதிலாகத்தான் நான் பதிலளித்து ட்வீட் போட்டேன். `தமிழ்நாட்டின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு’ என்று அவர் என்னைக் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது... கிழக்கிந்திய கம்பெனியோடு அவர்களுடைய மூதாதையர்கள் தொடர்புவைத்துக்கொண்டது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் குடும்பத்தினரின் மூதாதையர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் எனப் பேசிய வரலாற்றை தெரிந்துகொண்டு பேசட்டும். வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் பழைய வரலாற்றை மறைத்துவிட்டு, ஏதோ இவர்கள் இந்தியாவுக்குப் போராடியவர்கள்போலக் காட்டும்போது இவர்களுக்கு பதில் கொடுப்பது எங்களுடைய கடமை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீங்கள் என்னை மிரட்டிப் பார்த்தால் என்னுடைய பதிலடி வேறு மாதிரி இருக்கும். நான் அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனாலோ, முதலமைச்சராலோ வீட்டைவிட்டு வெளியே வந்து இதைச் செய்ய முடியுமா... எனக்கு அந்தத் துணிவும் தைரியமும் இருக்கின்றன.

அண்ணாமலை| பா.ஜ.க
அண்ணாமலை| பா.ஜ.க

தி.மு.க இவ்வளவு சமூகநீதி பேசுகிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேர் தி.மு.க-வில் இருக்கிறார்கள்... அப்படி யாராவது வந்தால் அவர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுவார்கள்.... ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட நான் இயேசு நாதர் அல்ல. என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன். தி.மு.க மரியாதையாக ஆரசியல் செய்தால், நானும் மரியாதையாக அரசியல் செய்வேன். தனிப்பட்ட முறையில் விமர்சனமோ, தரம் தாழ்ந்தோ போனார்கள் என்றால் பி.டி.ஆருக்கு அந்த பதிலடி கொடுத்தது என்னைப் பொறுத்தவரை எந்தவிதத்திலும் தவறு கிடையாது" என்றார்.