Published:Updated:

திமுக எம்.எல்.ஏ மொய் விருந்து: ``கறுப்பு பணம் வெள்ளையான விஞ்ஞானப்பூர்வ ஊழல்" - அண்ணாமலை தாக்கு

ஸ்டாலின் - அண்ணாமலை

``தலைமையையே விஞ்சும் கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.க-வினர்" என அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

திமுக எம்.எல்.ஏ மொய் விருந்து: ``கறுப்பு பணம் வெள்ளையான விஞ்ஞானப்பூர்வ ஊழல்" - அண்ணாமலை தாக்கு

``தலைமையையே விஞ்சும் கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.க-வினர்" என அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் கடந்த 23-ம் தேதி மொய் விருந்து நிகழ்ச்சியை நடத்தினார். இந்த மொய் விருந்தில் 11 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றியிருப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``100 ஆடுகள் வெட்டப்பட்டு 8,000 பேருக்கும் மேல் கலந்துகொண்ட மொய் விருந்தில், 40 மொய் வாங்கும் கவுண்டர்கள், பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனே வங்கிக் கணக்கில் சேர்க்க வங்கி அதிகாரிகள் எனக் குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டிருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார்
தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார்

விருந்துக்கு வந்தவர்கள் ரூ.1,000 முதல் ரூ. 5 லட்சம் வரை மொய் செய்திருக்கிறார்கள். இதில் தான் திமுக-வின் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் நடந்திருக்கிறது. இரண்டு லட்சத்துக்கு மேல் காசோலை தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது குற்றம், வங்கியில் ரூ 50,000-க்கும் மேல் செலுத்தினால் வருமான வரித்துறை கேள்வி கேட்கும். ஆனாலும், குவிந்திருக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டும். அதனால் நடத்தப்பட்டதே இந்த மொய் விருந்து. சாப்பிட்ட மக்களும் ஹாப்பி... சாப்பிட முடியாத கருப்புப் பணமும் வெள்ளைப் பணமாக மாறிய வித்தை நிகழ்ந்திருக்கிறது. தலைமையையே விஞ்சும் கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.க-வினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கி.வீரமணி
கி.வீரமணி

அதே போலத்தான், தி.க தலைவர் கி.வீரமணி எடைக்கு எடை மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாரத்தில் வைக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவில் தலைவர் அமர்ந்திருந்த தராசை ஒருவர் முட்டுக்கொடுத்ததும், அதே வீடியோ-வில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பையிலிருந்து ஒருவர் மேடைக்கு வருபவர்களுக்கு கட்டுகளைக் கொடுக்கும் காட்சியும், அதை மக்கள் எந்த சலனமும் இல்லாமல் தராசில் வைத்துச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. அங்கே தராசால் கறுப்புப் பணம் வெளுக்கப்பட்டது.

மக்களையும், அரசையும் முட்டாளாக்கும் இவர்களின் கொள்கைகள் இப்போதுதான் வெளிச்சமிடப்படுகிறது. உண்மையான ஊழலற்ற விடியல் ஆட்சி எப்போது வரும் என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.