Published:Updated:

"போலி சமூகநீதி நாடகம்; பின்தங்கிய மாணவர்கள்மீது அலட்சியம் காட்டும் திறனற்ற திமுக!" - அண்ணாமலை சாடல்

அண்ணாமலை

``அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்திருக்கிறது." - அண்ணாமலை

"போலி சமூகநீதி நாடகம்; பின்தங்கிய மாணவர்கள்மீது அலட்சியம் காட்டும் திறனற்ற திமுக!" - அண்ணாமலை சாடல்

``அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்திருக்கிறது." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள்மீது அலட்சியம் காட்டும் தி.மு.க., ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மீண்டும் அந்தத் துறைக்கு வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளிட்டிருக்கும் அறிக்கையில், ``மாநிலம் முழுவதுமுள்ள, சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்டப்படிப்புக்காகவும், பட்ட மேற்படிப்புக்காகவும், தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராடவேண்டிய அவலநிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மாணவர்கள் விடுதிக் கூரை மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். கடந்த மழைக்காலத்தில், மழைநீர், விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமலும், நோய்த் தொற்றுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையால், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள் மாணவர்கள்.

அண்ணாமலை அறிக்கை
அண்ணாமலை அறிக்கை

இதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு மாதா மாதம் இதர செலவாக வழங்கப்படவேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க, அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்திருக்கிறது. சென்ற ஆண்டு ஆதி திராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்திருக்கின்றனர். சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற தி.மு.க பதிலளிக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திறனற்ற தி.மு.க அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சியப் போக்கையும் காட்டுகிறது. ஆனால் அரசியல் மேடைகளில் சமூகநீதி நாடகம் அரங்கேற்றுவது தி.மு.க-வின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு, ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, உடனடியாக மீண்டும் அந்தத் துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, நூலகம் உள்ளிட்ட இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தமிழக பா.ஜ.க சார்பாக இந்த அறிக்கையின் வாயிலாக வற்புறுத்துகிறோம்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.