Published:Updated:

``பிரிவினைவாத திமுக-வுக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது!" - அண்ணாமலை சாடல்

அண்ணாமலை

``தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது ஆளுநரின் கருத்து. அதை தி.மு.க-வினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை." - அண்ணாமலை

``பிரிவினைவாத திமுக-வுக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது!" - அண்ணாமலை சாடல்

``தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது ஆளுநரின் கருத்து. அதை தி.மு.க-வினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், ``தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும்" எனப் பேசியிருந்தார். இதன் காரணமாக தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் போன்ற அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக ஆர்.என்.ரவியை விமர்சித்துவருகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இப்படியிருக்க ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ஆளுநரை விமர்சிக்க தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது’ என விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், ``திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும், சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துகளை எடுத்துரைக்கும் தி.மு.க கட்சியினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது...

அண்ணாமலை
அண்ணாமலை

சங்ககால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது ஆளுநரின் கருத்து. அதை தி.மு.க-வினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
ட்விட்டர்

இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷச் செடிகளை வளர்த்துவிட்டதில் தி.மு.க-வின் பங்கு பற்றி அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியிலுள்ள குளறுபடிகளை மறைப்பதற்காகத் திசைதிருப்பும் முயற்சியாகவே தி.மு.க-வினரின் செயல்பாடுகள் உள்ளன" என தி.மு.க-வைச் சாடியிருக்கிறார்.