Published:Updated:

``ஆதீனம் மேல கையை வச்சீங்க விளைவு பயங்கரமா இருக்கும்..!" - எச்சரிக்கும் அண்ணாமலை

அண்ணாமலை

`ஊழல் செய்வதில்தான் இந்த அரசாங்கம் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. காவல்துறை கன்னியமாக தன்னுடைய வேலையை செய்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காது.' - அண்ணாமலை

``ஆதீனம் மேல கையை வச்சீங்க விளைவு பயங்கரமா இருக்கும்..!" - எச்சரிக்கும் அண்ணாமலை

`ஊழல் செய்வதில்தான் இந்த அரசாங்கம் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. காவல்துறை கன்னியமாக தன்னுடைய வேலையை செய்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காது.' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

மத்திய பா.ஜ.க., அரசின் 8 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கடந்த வாரம்தான் திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்திந்த அண்ணாமலை, மோடி அரசின் 8 ஆண்டுக்கால சாதனைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கமாகப் பேசிவிட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில், ஒருவார இடைவெளியில் மீண்டும் பா.ஜ.க., அரசின் சாதனை குறித்துப் பேச திருச்சிக்கு வந்த அண்ணாமலைக்கு, பா.ஜ.க-வினர் தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

டிரம் செட்டுகள், வான வேடிக்கை, சரவெடியோடு ஆயிரக்கணக்கான பா.ஜ.க., தொண்டர்கள் சாலைகளில் குவிந்து நிற்க, திருச்சியின் முக்கியப் பகுதியாக புத்தூர் நால் ரோடு பகுதி கொஞ்சம் திணறித் தான் போனது. அண்ணாமலைக்கு பா.ஜ.க-வினர் கொடுத்த அதகளமான வரவேற்பு பார்ப்போரின் புருவங்களை உயர்த்தியது. ``இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது. 2024 தேர்தலில் பா.ஜ.க., 25 எம்.பி-க்களை ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், திருச்சிக்கு வந்து கூட்டத்தைப் பார்த்த பிறகு அந்த எண்ணிக்கை கொஞ்சம் குறைச்சலாகத் தெரிவித்துவிட்டோம், 39 எம்.பி-க்களை பிடிப்போம் எனச் சொல்லத் தோன்றுகிறது” என அண்ணாமலை கூட்டத்தைப் பார்த்து உற்சாகமாக கூறினார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தொடர்ந்து பேசியவர், ``நம்முடைய சாதனை விளக்கக் கூட்டம் நடக்க நடக்க, தி.மு.க-வினரும் திராவிட மாடல் அரசைப் பற்றி சொல்லப்போகிறோம் எனக் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஊழல் செய்வதில்தான் இந்த அரசாங்கம் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. காவல்துறை கன்னியமாக தன்னுடைய வேலையை செய்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காது. ரோட்டுல நடந்து போனா வெட்டுறான். முதலமைச்சர் என்ன தைரியத்தில் நம்பர் ஒன் அரசு என்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் அரசு என்கின்றனர். எல்லா அமைச்சரையும் மேடையின்மீது நிற்க வைத்து, ‘திராவிட மாடல் அரசு என்றால் என்ன?’ என்று சொல்லச் சொன்னால், ஒரே மாதிரி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திராவிட மாடல் அரசு என்றால் என்னவென்றே தெரியாது. நம்முடைய முதல்வரே 21 தடவை திராவிட மாடல் அரசு என்று சொல்லியிருக்கிறார். 21 முறையும் 21 வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்து இதுதான் திராவிட மாடல் அரசு என்கிறார்” என எடுத்த எடுப்பிலேயே தி.மு.க-வையும், அதன் திராவிட மாடலையும் விளாச ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை

தொடர்ந்து அமைச்சர்களின் மீது பேச்சைத் திருப்பியவர், ``இந்த மாவட்டத்தினுடைய அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, அவர் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றே தெரியாது. அவருடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் சினிமா ஷூட்டிங்கில் நடித்தால், முதல் ஆளாக ஷூட்டிங் போய் லைட்டிங் பாயாக அமர்ந்திருப்பார். அதுபோக நேரம் கிடைத்தால் பட வெளியீட்டு விழா, பாடல் வெளியீட்டு விழாவில் போய் உட்கார்ந்திருப்பார். இதெல்லாம் போகத்தான் ஸ்கூல் பக்கம் போய் வருகிறார். இன்னொரு அமைச்சரான சேகர் பாபுவோ புதிய காஷ்டியூமான காவி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார். சமீபத்தில் `ஆதீனம் அவர்களே கொஞ்சம் பார்த்து பேசுங்க. நாங்க அமைதியா இருக்கோம். அப்புறம் பழைய சேகர் பாபுவை காண்பிச்சேன்னா பிரச்னை ஆகிடும்’னு மதுரை ஆதீனம் அவர்களை மிரட்டியிருக்கிறார். பழைய சேகர் பாபுவை நீங்கள் காட்டுவதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டிருக்கிறது. நீங்க ஆதீனம் மேல மட்டும் சும்மா கையை வச்சிப் பாருங்களேன். பிரதமர் மோடி அவர்கள் சென்னை ஏர்போர்டில் மதுரை ஆதீனத்தைக் கூப்பிட்டு 10 நிமிஷம் பேசிட்டு போறாரு. அந்த ஃபோட்டோ வெளிய வந்த பின்னாடியாவது சேகர் பாபு உஷார் ஆகியிருக்கணும். உஷார் ஆகலைன்னா கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சின்னு அர்த்தம். இவர்கள் ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுடைய அழிவுக்கு அதுதான் காரணமாக இருக்கும். மறுபடியும் சொல்றேன், தப்பித் தவறி கூட ஆதீனத்தை தொட்றாதீங்க. விளைவு மிக பயங்கரமாக, மோசமாக இருக்கும். மக்களின் இறை நம்பிக்கையின்மீது கை வைக்காதீர்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism