Published:Updated:

`பிரதமர் மாண்பைக் குறைப்பது போன்ற காட்சிகள்’- தனியார் டி.வி சேனலுக்கு எதிராகக் கொதிக்கும் தமிழக பாஜக

நரேந்திர மோடி

பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களைவைத்து அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பா.ஜ.க ஐடி விங் தமிழகத் தலைவர் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அண்மையில் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணம் என அவரின் செயல்களைக் கேலி செய்யும்விதமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ``மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேசியிருப்பதாகவும், மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். அதற்கு என் நன்றிகள்” என ட்வீட் செய்துள்ளார்.

தமிழக பா.ஜ.க
தமிழக பா.ஜ.க

இந்நிலையில் தமிழக பா.ஜ.க ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் ``பிரதமர் மோடி குறித்து நகைச்சுவை என்ற பெயரில் சிறுவர்களை வைத்து அவதூறு பரப்பிய தனியார் தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனச் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்டையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., அண்ணாமலையின் ட்வீட்டுக்கு 'நடவடிக்கை யார் மீது... எடுத்தவர் மீதா... நடித்தவர் மீதா அல்லது அதைப் பார்த்து சிரித்தவர் மீதா?’ என பதில் ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism