Published:Updated:

`சில மாணவர்களை, கல்லறைக்கும் சிறைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?!’ - ஸ்டாலின் காட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

``சில மாணவர்களை, கல்லறைக்கும் சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

`சில மாணவர்களை, கல்லறைக்கும் சிறைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?!’ - ஸ்டாலின் காட்டம்

``சில மாணவர்களை, கல்லறைக்கும் சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published:Updated:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

``சில மாணவர்களை, கல்லறைக்கும் சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``என் பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும், கல்வி உரிமையை மீட்டெடுக்கவும் வேண்டும். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?

தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாடு சட்டசபை

இந்தச் சட்டமன்றம்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது. 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டப் பாதுகாப்பைப் பெற்றது. நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றது.

நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால்தான் முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதியை நிலைநாட்ட இந்தச் சட்டமன்றத்தில் கூடியிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின் - சட்டமன்றம்
ஸ்டாலின் - சட்டமன்றம்

நீட் தேர்வு என்பது ஏழை ,எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது. நீட் தேர்வு தேவை என்பது தனியார் பயிற்சி மையங்களுக்குச் சாதகமானது. நீட் தேர்வு என்பது மாணவர்களைக் கொல்லக்கூடியது. அது தேர்வு இல்லை, பலிபீடம். ஏழை, எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு. நீட் தேர்வு எழுத மாற்று நபர்களைப் பயன்படுத்துவது, நீட் மதிப்பெண்களில் திருத்தம்... உள்ளிட்ட பல நீட் தேர்வு மோசடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் சரியானவை இல்லை. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துகள் கேட்ட பிறகுதான் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது. தகுதி என்ற போர்வையிலுள்ள நீட் தேர்வு என்ற தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. மாநில சட்டமன்றத்துக்கு இருக்கக்கூடிய சட்டமியற்றும் அதிகாரத்தின்படிதான் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை இயற்றியிருக்கிறோம்.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் உரிமைக்காக எந்தச் சட்டத்தையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், நீட் தேர்வு பாகுபாடு காட்டுகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமத்துவம் என்பதுதான் இந்திய அரசியலமைப்பின் அடிநாதம். ஆளுநர் என்பவர், அமைச்சர் அவைக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும். மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என்று நம்புகிறேன். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவுக்கு ஒளிவிளக்கு ஏற்றிவைக்கிறோம்” எனக் கூறினார். அதன் பிறகு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

மேலும், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு இன்று அனுப்பி வைக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.