Published:Updated:

தமிழ்நாடு அரங்கு, புர்ஜ் கலீஃபா, புரிந்துணர்வு ஒப்பந்தம் -முதல்வர் ஸ்டாலினின் துபாய் விசிட் ஹைலைட்ஸ்

துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 24-ம் தேதி மாலை சென்னையிருந்து தனி விமானத்தில் கிளம்பினார்.

தமிழ்நாடு அரங்கு, புர்ஜ் கலீஃபா, புரிந்துணர்வு ஒப்பந்தம் -முதல்வர் ஸ்டாலினின் துபாய் விசிட் ஹைலைட்ஸ்

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 24-ம் தேதி மாலை சென்னையிருந்து தனி விமானத்தில் கிளம்பினார்.

Published:Updated:
துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்

முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 24-ம் தேதி மாலை சென்னையிருந்து தனி விமானத்தில் கிளம்பினார். அவரை அமைச்சர்கள், எம்.பி-எம்.எல்.ஏ-க்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வழியனுப்பிவைத்தனர்.

வழியனுப்பிய அமைச்சர்கள்
வழியனுப்பிய அமைச்சர்கள்

அன்றிரவு துபாய் சென்று இறங்கிய ஸ்டாலினை ஏற்கெனவே அங்கு சென்ற தமிழக அதிகாரிகளும், துபாய் அரசு அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலினை வரவேற்ற துபாய் அரசு
ஸ்டாலினை வரவேற்ற துபாய் அரசு

துபாய் அரசு வழங்கிய பி.எம்.டபில்யூ காரில் துபாய் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் ஓபெராய்க்குச் சென்றடைந்தார்.

துபாய் அரசு கொடுத்த கார்
துபாய் அரசு கொடுத்த கார்

அமீரக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்பதுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மன்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகளை மேள்கொள்வதன் மூலம் அமீரகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் ஸ்டாலின்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
துபாய் அமைச்சர்களுடன் சந்திப்பு
துபாய் அமைச்சர்களுடன் சந்திப்பு

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதில் உள்ள தனிச்சிறப்புகளான, ஒற்றைச் சாளர முறையில் அனுமதியை எளிதில் பெற்றுத் தாமதமின்றி தொழில தொடங்கும் வசதிகள் குறித்து ஸ்டாலின் அமீரக அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஸ்டாலின், தங்கம் தென்னரசு
ஸ்டாலின், தங்கம் தென்னரசு

அப்போது தமிழகத்தில் நிலவும் தொழில் தொடங்குவதற்கானச் சாதகமான நிலையை எடுத்துக்கூறி, அமீரக அமைச்சர்களை தமிழகத்துக்கு வருகை தருமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அந்தச் சந்திப்பின்போது, முதல்வர் ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட தமிழக அதிகாரிகளும், துபாய் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆலோசனையில் ஸ்டாலின்
ஆலோசனையில் ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நம்பர் 1 தமிழ்நாடு என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை, இந்தச் சந்திப்பின் மூலம் வலுப்பெற்றது” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். சந்திப்பு முடிந்ததும் அமீரக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறிய கண்ணாடிக்குள் வடிவமைக்கப்பட்ட பாய்மரப் படகு பரிசாக வழங்கப்பட்டது.

ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு
ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு

முதல்வர் ஸ்டாலின் சார்பில் ‘KALAIGNAR A LIFE' மற்றும் 'JOURNEY OF A CIVILIZATION INDUS TO VAIGAI' ஆகிய புத்தகங்கள் அமீரக அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது.

துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்
துபாய் அமைச்சர்களுடன் ஸ்டாலின்

அடுத்து, குடும்பத்துடன் மதிய உணவை முடித்துவிட்டு, சிறிது ஓய்வுக்குப் பிறகு இரவு 7.30 மணியளவில் துபாய் எக்ஸ்போ 2020 நடைபெறும் இடத்துக்குச் சென்றார். அங்கு இந்திய அரங்கினுள், தமிழ்நாடு அரங்கினை முதல்வர் ஸ்டாலினும், துபாய் அரச குடும்ப உறுப்பினரும், சகிப்புத்தன்மைக்கான கேபினட் அமைச்சரும், துபாய் எக்ஸ்போவின் ஆணையருமான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானும் இணைந்து ரிப்பன் வெட்டி அரங்கினைத் திறந்துவைத்தனர்.

தமிழ்நாடு அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்த ஸ்டாலின்
தமிழ்நாடு அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்த ஸ்டாலின்

அதன்பின், துபாய் எக்ஸ்போவிற்கு வருகைத் தந்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தனது இசை அரங்கிற்கு வருகைத்தருமாறு ஸ்டாலினைக் கேட்டுக்கொண்டார் ரகுமான். அதன்பேரில் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ரகுமான் ஸ்டூடியோவுக்குச் சென்றார். அங்கு ரகுமான், தான் இசையமைத்த ‘மூப்பில்லா தமிழே.. தாயே’ என்ற ஆல்பத்தை முதல்வருக்கு ஒலி/ளி-க்கவிட்டுக் காண்பித்தார்.

ரகுமான் ஸ்டூடியோவில் ஸ்டாலின், உதயநிதி
ரகுமான் ஸ்டூடியோவில் ஸ்டாலின், உதயநிதி

அரங்கு நிகழ்வுகளை முடித்துவிட்டு வெளியில் வந்து, அங்குக் கூடியிருந்த துபாய் வாழ் தமிழர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், “தமிழகம் உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கிவருகிறது. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

குழுமியிருந்த தமிழர்களைப் பார்த்து கையசைத்த ஸ்டாலின்
குழுமியிருந்த தமிழர்களைப் பார்த்து கையசைத்த ஸ்டாலின்

அதை முடித்துவிட்டு, இரவு 8.30 மணியளவில் உலகின் உயரமானக் கட்டடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபா எதிரே அமைக்கப்பட்டிருந்த டைனிங் ஹால் போன்ற இடத்தில் குடும்பத்துடன் அமர்ந்தார் ஸ்டாலின்.

புர்ஜ் கலிஃபா
புர்ஜ் கலிஃபா

தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மையைப் பரைசாற்றும் காணொளியும், கருணாநிதி உலகச் செம்மொழி மாநாடு நடத்தியபோது அதற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘செம்மொழியான தமிழ் மொழியே’ பாடலும் புர்ஜ் கலீஃபாவில் காட்சிப்படுத்தப்பட்டது. அதை ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறிது நேரம் ரசித்துக்கொண்டிருந்தனர்.

காணொளி
காணொளி
முதலீட்டாளர் மாநாடு
முதலீட்டாளர் மாநாடு

அதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஓபெராய் சென்று ஓய்வெடுத்த ஸ்டாலின், மறுநாள் 26-ம் தேதி சனிக்கிழமை மதியம் துபாய் தாஜ் ஹோட்டலில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் துபாய் இன்வெஸ்டர்களைச் சந்தித்தார்.

மாநாடு
மாநாடு

துபாயில் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுடனான முதலமைச்சரின் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு கொட்டிக்கிடக்கின்றன, எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்யலாம், தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விளக்கும் Audio Visual ஒளிபரப்பப்பட்டது.

மாநாட்டில் முதல்வர், அமைச்சர்
மாநாட்டில் முதல்வர், அமைச்சர்

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தன்னம்பிக்கை மொழியோடு துபாய் நாட்டுக்குக் குடிபெயர்ந்து இந்த மண்ணையும் வளப்படுத்தி வரும் எனது சொந்தங்களுக்கு வணக்கம். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழர்களுக்குமான உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் துபாய் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து அதன் மூலம் சமூகநலனைப் பேணும் நோக்குடன் நாங்கள் செயல்படுகிறோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஐக்கிய அரபு நாடுகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், தொழில்புரிந்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குடன் செயல்படுகிறோம். இந்தச் சூழலில் எங்கள் மாநிலத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. வேளாண்மை, நிதி நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வழி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். மின்னணுவியல், மின் வாகனங்கள், மின்னேற்றி நிலையங்கள், புத்தொழில், புத்தாக்கத் தொழில்களிலும், தூத்துக்குடியில் சமீபத்தில் நான் அடிக்கல் நாட்டிய ஃபர்னிச்சர் பார்க் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை வரவேற்கிறோம். எங்கள் வளர்ச்சியிலும் பங்கேற்று, நீங்களும் பயன் அடையுமாறு மீண்டும் அன்புடன் வரவேற்கிறேன்" என முதலீட்டாளர் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு அரங்கு, புர்ஜ் கலீஃபா, புரிந்துணர்வு ஒப்பந்தம் -முதல்வர் ஸ்டாலினின் துபாய் விசிட் ஹைலைட்ஸ்

துபாயில் உள்ள இந்திய தொழில் வர்த்தக கவுன்சில் தலைவர் சுரேஷ் குமார், லூலூ குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, அமீரக சர்வதேச முதலீட்டாளர் கவுன்சில் இயக்குநர் ஜமால் சைப் அல் ஜர்வான், தூதரக அதிகாரி அமன் பூரி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள்
மாநாட்டில் பங்கேற்றவர்கள்

அதை முடித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் முதல்வர்
ஆலோசனையில் முதல்வர்
முதல்வர் ஆலோசனை
முதல்வர் ஆலோசனை

அப்போது, துபாய் ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து
ஒப்பந்தம் கையெழுத்து
ஒப்பந்தத்துடன் முதல்வர்
ஒப்பந்தத்துடன் முதல்வர்

அதன் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏற்பாடு செய்த 'நம்மில் ஒருவர்.. நம்ம முதல்வர்..' என்ற நிகழ்வில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நிகழ்வு
புலம்பெயர்ந்த தமிழர்கள் நிகழ்வு

முந்தைய நிகழ்வுகளில் கோட்-சூட்டில் கலக்கிய ஸ்டாலின், புலம்பெயர்ந்த தமிழர்கள் நிகழ்வில் பாரம்பர்ய வேஷ்டி சட்டையில் பங்கேற்றார்.

வேஷ்டி சட்டையில் முதல்வர்
வேஷ்டி சட்டையில் முதல்வர்

அங்கு பேசிய ஸ்டாலின், "தி.மு.க அரசை அயலகத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாயின் கனிவோடு அயலகத் தமிழர்களை தி.மு.க பாதுகாக்கும்.

விழாவில் உதயநிதி, எம்.எம்.அப்துல்லா
விழாவில் உதயநிதி, எம்.எம்.அப்துல்லா

நம்மை நாடுகள் பிரிக்கலாம் ஆனால் தமிழ் மொழி நம்மை இணைக்கிறது. தமிழுக்கு மட்டுமே இணைக்கும் ஆற்றல் உண்டு. தமிழால் நாம் இணைந்தால், மதத்தால், சாதியால் நம்மை யாரும் பிரிக்க முடியாது. இதைவிடப் பெருமை என்ன இருக்கப்போகிறது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பேசும் ஸ்டாலின்
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பேசும் ஸ்டாலின்

அயலகத் தமிழர் நலன் காப்பதற்காக ஏராளமான திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தி.மு.க அரசு என்பது ஒரு கட்சியின் அரசல்ல.. ஒரு இனத்தின் அரசு!" என்று முடித்தார்.

உரையாற்றும் ஸ்டாலின்
உரையாற்றும் ஸ்டாலின்

விழாவில் தி.மு.க அயலக அணி சார்பில் ஸ்டாலினுக்கு வீர வாளை பரிசாக அளித்தார் அதன் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஓட்டல் திரும்பினார் ஸ்டாலின்.

வீர வாள் பரிசு
வீர வாள் பரிசு

முதல்வருடன் சென்றிருக்கும் அதிகாரிகள் மத்தியில் பேசியபோது, ``முதல்வர் ஸ்டாலினுடன் அவர் மனைவி துர்கா ஸ்டாலின், பேரன்கள் இன்பன் உதயநிதி, கிரிஷ் ஸ்கந்தன் மற்றும் தன்மையா உதயநிதி, மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகிய குடும்ப உறுப்பினர்களும், உதவியாளர் தினேஷ்குமார், முதல்வரின் செயலாளர்களான உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனுஜார்ஜ், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் ஒரே விமானத்தில் துபாய் சென்றுள்ளனர். மகன் உதயநிதி ஸ்டாலின் 23-ம் தேதியும், மருமகன் சபரீசன், அண்ணாநகர் மோகன் மகன் கார்த்திக் உள்ளிட்டோர் முன்னதாகவே துபாய் சென்று ஏற்பாடுகளை கவனித்துவந்தனர். உளவுத்துறை உயரதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதமும் முன்னதாகவே துபாய் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார். வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் சி.இ.ஓ பூஜா குல்கர்னி உள்ளிட்ட அதிகாரிகளும் பல நாள்களுக்கு முன்பே துபாய் சென்றுவிட்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அமீரகத்தைச் சேர்ந்த லூலூ என்கிற சங்கிலித்தொடர் சூப்பர் மார்கெட்டுகளை நிர்வகித்துவரும் அதன் உரிமையாளர் யூசுஃப் அலி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோல்டன் கார்டு கொடுத்திருக்கிறார். அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை கோல்டன் கார்டு வைத்திருப்பவர் லூலூ சூப்பர் மார்கெட்டில் உள்ள எத்தனைப் பொருள்களை வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.

லூலூ குழுமம்
லூலூ குழுமம்

பட்டியலில் உள்ளவர்கள் தவிர, தி.மு.க ஐ.டி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், தி.மு.க அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, சபரீசனின் நெருங்கிய நண்பர்கள் ரித்தேஷ் உள்ளிட்டோரும், உதயநிதியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் துபாய்க்குத் தனித்தனியாக முன்னதாகவே சென்று ஏற்பாடுகளை செய்துமுடித்தனர். புர்ஜ் கலீஃபாவில் தமிழ் குறித்த காணொளியை ஒளிபரப்ப 50 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஸ்டாலின், குடும்பம், உறவுகள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த குழுவும் சென்று வரும் செலவும் அரசு கஜானாவில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

துர்காவுடன் ஸ்டாலின்
துர்காவுடன் ஸ்டாலின்

இந்த நிலையில், துபாய்க்கு 5,000 கோடி ரூபாய் ஸ்டாலினுடன் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அவருடைய கூற்றுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

மார்ச் 27-ம் தேதி அபுதாபி செல்லும் ஸ்டாலின், அமீரகப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி செல்கிறார். மார்ச் 31 அல்லது ஏப்ரல் ஒன்றாம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வருகிறது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism