Published:Updated:

`கோ பேக் மோடி’ சொல்லும் காங்கிரஸ் - திமுக-வுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமா?!

செஸ் ஒலிம்பியாட் சின்னம் - முதல்வர் ஸ்டாலின் ( ashwin )

தமிழ்நாட்டில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதனால் அந்த விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்துமா?

`கோ பேக் மோடி’ சொல்லும் காங்கிரஸ் - திமுக-வுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமா?!

தமிழ்நாட்டில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதனால் அந்த விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்துமா?

Published:Updated:
செஸ் ஒலிம்பியாட் சின்னம் - முதல்வர் ஸ்டாலின் ( ashwin )

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயின்ட்ஸ் நட்சத்திர ஹோட்டலில் இன்று தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக விரிவான ஏற்பாடுகளைத் தி.மு.க அரசு தீவிரமாகச் செய்துவருகிறது. பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் இந்தப் போட்டியை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவித்தது. இது குறித்து, ``44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் காங்கிரஸ் பேரியக்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது, வாழ்த்துகிறது. அதேநேரத்தில் நாட்டிலுள்ள வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், ஆபத்தான அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது... என மத்திய அரசின் செயல்பாடுகள் உகந்ததாக இல்லை. அதேபோல, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பது, தன்னாட்சிபெற்ற அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மத்திய வருமான வரித்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது, தமிழ்நாட்டுக்கு எதிரான நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழ்நாட்டு ஆளுநரைத் தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராகப் பேசவைப்பது, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்தால் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்குத் துணை போகிறது மத்திய அரசு. ஜனநாயகத்துக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையிலும் செயல்படுகிறது பா.ஜ.க.

பிரதமர் மோடி - தமிழ்நாட்டுத் தலைவர்கள்
பிரதமர் மோடி - தமிழ்நாட்டுத் தலைவர்கள்

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி தொடங்கிவைக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளைத் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கிறோம். இந்தப் புறக்கணிப்பு, ஜனநாயகத்துக்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல” என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க தலைமையிலான அரசு நடத்தும் மிக முக்கியமான சர்வதேச விளையாட்டுப் போட்டி செஸ் ஒலிம்பியாட். இதை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது தி.மு.க – காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வியை அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சிவ ராஜசேகரினிடம் வைத்தோம். “இன்றைக்குத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கொள்கைகளில் உறுதியாக இருக்கும் இரண்டு கட்சிகள் என்றால் அது தி.மு.க-வும் காங்கிரஸும் மட்டும்தான். இந்த அடிப்படைக் கொள்கையில் இரண்டு கட்சிகளுக்குள்ளும் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் புறக்கணிப்பதாக எடுத்த முடிவு தமிழ்நாட்டுக்கோ, செஸ் போட்டிக்கோ எதிராக எடுத்த முடிவல்ல. மோடிக்கும், அவரின் கொள்கைக்கும் எதிராக எடுத்த முடிவு. குறுகியகாலத்தில் தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். அதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், எங்களை ஜனநாயகரீதியில் செயல்படவிடாமல் தடுப்பதோடு மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதாலும்தான் பா.ஜ.க-வுக்கு காட்டும் எதிர்ப்பாகவே நாங்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறோம்.

சிவ ராஜசேகரன் - காங்கிரஸ்
சிவ ராஜசேகரன் - காங்கிரஸ்

தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க தலைவர் தளபதி ஸ்டாலின் என்பதிலும் இரு வேறு தன்மைகள் இருக்கின்றன. அதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். எங்கள் புறக்கணிப்பு முதல்வரைச் சங்கடப்படுத்த வேண்டும் என்பதல்ல. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதுதான். இதை முதல்வர் ஸ்டாலினும் புரிந்துகொண்டிருக்கிறார். எனவே, இதனாலெல்லாம் எங்களுக்குள் இருக்கும் உறவில் விரிசல் ஏற்படாது” என்றார் தீர்க்கமாக.

செஸ் ஒலிம்பியாட் தொடக்விழாவை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது குறித்து தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பழ.செல்வகுமாரிடம் கேட்டோம். “இது, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக்கூடிய உரிமை. ஒரு விழாவில் கலந்துகொள்வதும் அதைப் புறக்கணிப்பதும் அவர்களின் ஜனநாயக உரிமை. அதை எப்போதும் தி.மு.க மதிக்கும். நீண்ட நாள்களாக இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அரசு விழாவில் யாரை அழைப்பது என்ற அரசு நெறிமுறைகள் நன்றாகவே தெரியும். எனவே, அரசியல் கட்சியாக இல்லாமல் ஆளும் அரசாக தி.மு.க செய்வதன் அடிநாதம் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். இந்தப் புரிதலோடு இருக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்குள்ளுமான கூட்டணி என்பது மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளிப்பது என்ற அறத்தின்மீது கட்டப்பட்ட ஒரு கோபும். எனவே, இந்தக் கட்சிகளுக்குள் இந்த ஒரு விவகாரத்தால் விரிசல் ஏற்படும் என்பதெல்லாம் அதீத கற்பனையில் பேசப்படும் விவகாரம். அதற்கு வாய்ப்பே இல்லை.

தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பழ.செல்வகுமார்
தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பழ.செல்வகுமார்

அரசியலில் கொள்கை வேறு, தேர்தலுக்கான கூட்டணி என்பது வேறு என்பதைத் தரம் பிரித்தும் பார்க்கும் அடிப்படை இரு கட்சிகளுக்கும் இருக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் அவரவர் கொள்கைக்கு மதிப்பளிக்கும் அறத்தோடு நடந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறது. மற்றவர் உரிமையில் தலையிடக் கூடாது என்ற தெளிவும் இருக்கிறது. எனவே, நிச்சயம் காங்கிரஸின் புறக்கணிப்பு கூட்டணிக்குள் எந்த விரிசலையும் கொண்டுவராது” என்றார் உறுதியாக!