Published:Updated:

``அமைச்சராக ஆண்டுகளைக் கடத்த ஆசையில்லை... சாதிக்க வேண்டும்!" - மதுரையில் அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ்

`அமைச்சராக ஆண்டுகளைக் கடத்த வேண்டும் என்பது ஆசையில்லை. இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு, பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.' - அன்பில் மகேஸ்

``அமைச்சராக ஆண்டுகளைக் கடத்த ஆசையில்லை... சாதிக்க வேண்டும்!" - மதுரையில் அன்பில் மகேஸ்

`அமைச்சராக ஆண்டுகளைக் கடத்த வேண்டும் என்பது ஆசையில்லை. இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு, பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.' - அன்பில் மகேஸ்

Published:Updated:
அன்பில் மகேஸ்

மதுரை, நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ``பள்ளிக் கல்வித்துறையில் அனைவரும் கூட்டாகச் செயல்பட்டால்தான் இந்தத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அமைச்சராக ஆண்டுகளைக் கடத்த வேண்டும் என்பது ஆசையில்லை. இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு, பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். கல்வி, சுகாதாரம் இரு கண்களாக நினைத்து தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டுவருகிறார். பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அதிகாரிகள் துறையின் முக்கியத்துவம் கருதிச் செயல்பட வேண்டும்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போதைய டிஜிட்டல் உலகில் மாணவர்களைக் கையாள்வது சிரமமான ஒன்றுதான். ஒவ்வொரு மாணவரையும் ஒரே மாதிரியாகக் கையாள்வதைவிட மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றாற்போல் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக, நண்பர்களாக, தாயாக இப்படிப் பல்வேறு பரிமாணங்களுடன் வழிநடத்த வேண்டும். அப்போதுதான் நம்மைத் தேடிவரும் தகரங்களைக்கூடத் தங்கமாக மாற்ற முடியும். அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடிவர சாத்தியப்படுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆளுமைத்திறன் உட்பட பல்வேறு திறமைகளை மேம்படுத்த இது உதவும்.

மதுரை மாவட்டத்தில் இரண்டாவது பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவைத்திருக்கிறேன். ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்தும்போது அடுத்தடுத்த கட்டங்களையும் வலுப்படுத்த முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறோம். 2025-ல் பெருமையாகச் சொல்லக்கூடிய வகையில் தமிழ்நாடு இருக்கும் வகையில் செயல்படுவோம்.

தொடக்கக் கல்விக்கென தனி நிர்வாகம் செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. தொடர்ந்து ஒருங்கிணைத்து செயல்படுத்துவோம்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பதால் மாநிலக் கல்விக் கொள்கையில் பாடத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து தற்போது பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை ஆய்வுசெய்து அதை முதல்வர் தேர்வுசெய்து செயல்படுத்துவார்" என்றார்.

அவரிடம், ``10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுக்குப் பிறகு அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்களே?" எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அன்பில் மகேஸ், ``தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மாறுதலாக இருந்தாலும் ஜூன் மாதமே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தோம். இதைத் தேர்வில் தோல்வி எனக் கருதக் கூடாது. அடுத்தகட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் எண்ண வேண்டும்.

மாணவர்கள் தொடர்புகொள்வதற்கு, இலவச எண்களையும் வழங்கியிருந்தோம். ஆனாலும் இது போன்ற வருத்தமான சம்பவங்கள் நடைபெற்றுவிடுகின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும், அதை வெளிக்கொண்டுவரும் விதமாகச் செயல்படவேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் முன்னேற்றவேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அதனால் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

``அரசுப் பாடப் புத்தகங்களைத் தனியாக விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுகிறது" என்ற கேள்விக்கு, ``அவ்வாறு புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு தவறுகள் நடந்தால் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு 10 விதமான பொருள்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன" என்றார்.

 அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

``கிராமப் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுகின்றனவே?" என்ற கேள்விக்கு, ``அவ்வாறு நடைபெற்ற இடங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம். இடியும் நிலையிலிருக்கும் கட்டடங்களுக்குள் வைத்து மாணவர்களைப் படிக்கவைக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த முறையே 1,031 பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் அந்தக் கட்டடங்கள் புதிதாகக் கட்டப்படவிருக்கின்றன. அடுத்த கல்வியாண்டில் இது போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அதிக அளவு ஹைடெக் கம்ப்யூட்டர் லேப்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இல்லம் தேடிக் கல்வித்திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு திட்டங்களை அதிகப்படுத்த முடியும். இதை மாணவர்கள் அதிக அளவு விரும்பிப் பயில்கின்றனர். தங்களை மேம்படுத்துகின்றனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism