Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெண் மேயர்!

சென்னை மாநகராட்சி

விரைவில் நடக்கவிருக்கிற சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெண் ஒருவர்தான் மேயராக முடியும் என்கிற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெண் மேயர்!

விரைவில் நடக்கவிருக்கிற சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெண் ஒருவர்தான் மேயராக முடியும் என்கிற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
சென்னை மாநகராட்சி
சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைப் பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர் நேர்காணல், கூட்டணிக் கட்சிகளுடனான இடப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழக அரசு
தமிழக அரசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1971-72 காலகட்டத்தில் சென்னையின் மேயராக திமுக-வைச் சேர்ந்த காமாட்சி ஜெயராமன் பதவி வகித்துள்ளார். அவருக்குப் பிறகு, ஆறுமுகம் என்பவர் ஓராண்டுகள் சென்னையின் மேயராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு, 23 ஆண்டுகள் கழித்து, 1996-ல் தான் தேர்தல் நடந்தது. அப்போது, கவுன்சிலர்களால் இல்லாமல் மக்களால் நேரடியாக மேயரைத் தேர்வு செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது போட்டியிட்டு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயக்குமார் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு அதிமுக ஆதரவளித்தது. ஆனால், அந்தத் தேர்தலில், சந்திரலேகாவைவிட நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஸ்டாலின் வெற்றிபெற்றார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அதற்கு அடுத்ததாக, 2001-ல் நடந்த மாநகராட்சித் தேர்தலிலும் ஸ்டாலின்தான் வெற்றி பெற்றார். அப்போது, அதிமுக சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாலகங்காவைவிட, 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். மற்ற, கட்சிகளான காங்கிரஸ், மதிமுக சார்பில் ஆண்களே வேட்பாளர்களாக நின்று குறைவான வாக்குகளையே பெற்றனர். 2002-ல் ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட, கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக 2006-ம் ஆண்டுவரை பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்த மா.சுப்பிரமணியனை, எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றித் தேர்வானார். அப்போது மக்களே நேரடியாக வாக்களிக்கும் முறை இல்லாமல், கவுன்சிலர் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக, 2011-ல் மீண்டும் மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையில் தேர்தல் நடந்தது. அதில், அதிமுகவைச் சேர்ந்த சைதை.துரைசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மா.சுப்பிரமணியனைவிட, 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலிலும் பிரதான கட்சிகளின் சார்பாகவோ, சுயேச்சையாகவோ கூட பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

சைதை துரைசாமி
சைதை துரைசாமி

இந்த நிலையில், விரைவில் நடக்கவிருக்கிற சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெண் ஒருவர்தான் மேயராக முடியும் என்கிற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மேயராகும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும், பட்டியலின பிரிவுக்குச் சென்னை மாநகராட்சி ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் மேயராக வருவார். ஆனால், நேரடித் தேர்தலாக இல்லாமல், கவுன்சிலராகப் போட்டிட்டு வெற்றிபெற்று, கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஏற்கெனவே நம் பக்கத்து மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் பெண் ஒருவரே மேயராகப் பணியாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism