Published:Updated:

அமைச்சர்கள் நிர்வகித்துவந்த துறைகள் மாற்றம்... புதிதாக உருவாகிறது `இயற்கை வளத்துறை'

தங்கம் தென்னரசு
News
தங்கம் தென்னரசு

தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 3 அமைச்சர்கள் நிர்வகித்து வந்த துறைகளை மாற்றியமைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த சர்க்கரைத் துறை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழக அரசு அரிக்கை
தமிழக அரசு அரிக்கை

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனித்து வந்த விமான நிலையங்கள் துறை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்படுகிறது. வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.எம்.சி.எல்) நிறுவனம், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு பதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலைமை செயலகம்
தலைமை செயலகம்

திடீரென தமிழக அரசு, அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்திருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 38 அரசுத் துறைகள் உள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, கனிமவள நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கீழ் வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளத்துறையை கவனிப்பார் என்றும், புவியியல், சுரங்கத்துறை இயக்குநரகம், களிமவள நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறையின் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.