Published:Updated:

`ஜெய் பீம்’ நிஜ நாயகன் நீதிபதி சந்துருவுக்கு விருது! - தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள்

நீதிபதி சந்துரு - க.திருநாவுக்கரசு
News
நீதிபதி சந்துரு - க.திருநாவுக்கரசு ( PremKumar SK )

சமூகநீதிக்கான அம்பேத்கர் விருதுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவும், தந்தை பெரியார் விருதுக்கு திராவிடப் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஆண்டுதோறும் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு, பெரியார், அம்பேத்கர் பெயரில் விருது வழங்கும் என அறிவித்திருந்தது. மேலும் விருதுடன் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 2021-ம் ஆண்டுக்கான சிறந்த சமூகச் செயற்பாட்டாளருக்கான பெரியார், அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க.திருநாவுக்கரசு
க.திருநாவுக்கரசு

அதில் சமூகநீதிக்கான அம்பேத்கர் விருதுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவும், தந்தை பெரியார் விருதுக்கு திராவிடப் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் பரிசுத்தொகையும் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

விருது வழங்கும் விழா, ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று நடைபெறும் என்றும், பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.