Published:Updated:

கொரோனா அலர்ட்: மதுரையில் இந்த கோயில்களில் ஆக்.8 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோயில், பழமுதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் நாளை முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இன்று முதல் மக்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளதால் வழிபடவும், பரிகார பூஜை பண்ண முடியாமலும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். சில ஊர்களில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்

கொரோனா 3-ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில் சில முன்னேற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று நேற்று அறிவித்தது. இதை சில மாவட்டங்களில் இன்றே நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் -1 முதல் 3-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்ட நிலையில், இந்த விவரம் தெரியாமல் ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு வழிபட வந்த ஏராளமான வெளியூர் மக்கள் ஏமாற்றமடைந்தனர். கோயில் வாசலில் நின்று சிலர் வணங்கிவிட்டு சென்றனர்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்
உ.பாண்டி
கொரோனா அலர்ட்: `தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு!'

இது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேநேரம் மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோயில், பழர்முதிர்சோலை ஆகிய திருக்கோயில்களில் நாளை முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்ததால் நாளைய தினம் சாமி கும்பிடும் வகையில் கிளம்பி வந்த வெளியூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இன்றே கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு கிளம்பினார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தொடர்ந்து மீனாடசி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயிலில் நடக்கவிருந்த ஆடி மாத முக்கிய நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு