Election bannerElection banner
Published:Updated:

`இளைஞர்களுக்கு ஏகேஷ் முன்மாதிரி!'- சட்டமன்றத்தில் ரூ.10 லட்சம் நிதி அறிவித்து பாராட்டிய முதல்வர்

ஏகேஷின் புகைப்படத்தைப் பார்த்து அழும் தாயார்
ஏகேஷின் புகைப்படத்தைப் பார்த்து அழும் தாயார்

இளம் பெண்ணின் உயிரைக் காப்பற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர் ஏகேஷின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சாலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆட்டோவில் கடத்திச்செல்லப்பட்ட இளம் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஏகேஷ் என்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்குறித்து விகடன் உள்ளிட்ட மீடியாக்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டன. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில், ஏகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏகேஷ்
ஏகேஷ்

சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் பழனிசாமி, "இளைஞர்கள் ஏகேஷ், எஸ்தர் பிரேம்குமார், வினித், துரைராஜ் மற்றும் பிராங்க்ளின் ஆகிய ஐந்து பேரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், பவானி என்ற பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றிய வீரத்தையும், சமூக பொறுப்புணர்வையும் மனதார பாராட்டுகிறேன்.

`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு!' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர்

இதுபோன்ற சம்பவங்களின்போது, காவல்துறையினருடன் இணைந்து, இளைஞர்களும் பொதுமக்களும், தவறுகளைத் தட்டிக் கேட்கவும் போராடவும், துணிச்சலுடன் செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது.

இச்சம்பவத்தில் தனது உயிரை துச்சமென மதித்து, ஆபத்திலிருந்த பெண்ணைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, தவறுசெய்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடிக்கப் போராடி, உயிரிழந்த ஏகேஷின் தீரச்செயலையும் சமூக அக்கறையையும், அவரது குடும்ப நிலையையும் கருத்தில்கொண்டு, அவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

ஏகேஷின் துணிச்சல் மெச்சத்தக்கது!
முதல்வர் பழனிசாமி

விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவரும் பிராங்க்ளின் என்ற இளைஞருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்த எஸ்தர் பிரேம்குமார், வினித் மற்றும் துரைராஜ் ஆகியோருக்குத் தலா 25,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு