Published:Updated:

திருமண நிதியுதவித் திட்டம் `டு' உயர்கல்வி உறுதித் திட்டம் - திமுக அரசுத் தரப்பு விளக்கம் என்ன?

தாலிக்குத் தங்கம் திட்டம்

`மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்', `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்'-ஆக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்வைக்கும் விளக்கம் என்ன?

திருமண நிதியுதவித் திட்டம் `டு' உயர்கல்வி உறுதித் திட்டம் - திமுக அரசுத் தரப்பு விளக்கம் என்ன?

`மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்', `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்'-ஆக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்வைக்கும் விளக்கம் என்ன?

Published:Updated:
தாலிக்குத் தங்கம் திட்டம்

தாலிக்குத் தங்கம் திட்டம்:

தமிழக அரசு சார்பில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றில், மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம் மிகவும் முதன்மையானது. இந்தத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்குத் தங்கமும் சேர்த்துத் தரப்படும். பெண்களின் கல்வித் தகுதியைவைத்து அவர்களுக்கான நிதியுதவி செய்யப்படும்.

தாலிக்குத் தங்கம்
தாலிக்குத் தங்கம்

இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான நிதியுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஒன்று, பத்தாவது வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். அதேபோல, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். தங்க நாணயம் சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடியாகவும், உதவித்தொகை பணம் அவர்களின் வங்கிக் கணக்கிலும் வரவுவைக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு அறிவிப்பு:

இந்த நிலையில், சட்டப்பேரவையில் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும். இதைச் சரிசெய்ய `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்', `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிகளின் உயர்கல்வி இடைநிற்றல் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும். ஏற்கெனவே அந்த மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும். இந்த திட்டத்ஹால் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள் பயனடைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் விளக்கம்:

இந்தத் திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாகப் பேசிய தமிழக முதல்வர், ``திருமண உதவித்தொகை திட்டத்தைக் கொண்டுவந்தது தி.மு.க அரசுதான். அந்தத் திட்டத்தை முதலில் நிறுத்தியது அ.தி.மு.க அரசு. பின்னாளில் அந்தத் திட்டத்தின் முதியத்துவத்தை உணர்ந்து உதவித்தொகையுடன் தங்கம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க கொண்டுவந்தது. தற்போது இந்தத் திட்டத்தில் நிலுவையிலுள்ள மனுக்களை ஆய்வு செய்தபோது, 24.5 சதவிகிதம் பேர் மட்டுமே தகுதியுள்ள பயனாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்துப் பேசி திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை" என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவிகிதமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக இந்தத் தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்பாக கல்வி என்ற நிரந்தரச் சொத்தை மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமைக் கொள்கையின் மறுவடிவம்தான் இந்த 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பயன்பெற்றுவந்தார்கள். தற்போது, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள்" என்று விளக்கம் கூறினார்.

நிதியமைச்சர் விளக்கம்:

இது குறித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் ``தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப விண்ணப்பங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுவந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தங்கம் வழங்கப்படவில்லை. இதனால், 3,34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன" என்றார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மேலும், ``நிலுவையில் உள்ளவர்களுக்குத் திட்டத்தின் பயன்களை வழங்க 3,000 கோடி ரூபாய் நிதி தேவை. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை மாநிலத் தணிக்கை துறை கண்டறிந்துள்ளது. நான்கு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த காரணத்தால் மீண்டும் செயல்படுத்துவதில் பெரும் பிரச்னை உள்ளது. அதோடு, ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு வறியநிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மத்தியிலிருந்து கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணமாக இருந்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism