Published:Updated:

'மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் விநியோகம்; தமிழக அரசு சொல்வதென்ன?'

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கால் கடுக்க நிற்கும் நிலை தமிழகத்தில் அதிகரித்து வந்தது. தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக ரெம்டெசிவிர் வாங்க தங்கள் தொற்றையும் பற்றி கவலைப்படாமல் பலர் வரிசையில் காத்திருந்தனர். பலருக்கு பல நேரம் நின்றும் மருந்து கிடைக்கவில்லை. இப்படி ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் கள்ள சந்தையிலும் ரெம்டெசிவிர் அதிக விலைக்கு விற்கப்படுவது நடக்கிறது. இது தொடர்கதையாகி மக்களை கடும் சிக்கலுக்கு தள்ளியது இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை. இதற்கு தீர்வு பெறவேண்டி அனுதினமும் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையொட்டி இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ரெம்டெசிவிர் மருந்து தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என அரசின் மருத்துவத்துறை கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற முறையில் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கும் தனியார் மருத்துவமைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் தேவைகளை இணையத்தில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் , கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்

அடுத்த கட்டுரைக்கு